ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மாரடைப்பு நோயாளிகளின் ரத்தத்தில் அதிக பிளாஸ்டிக் துகள்கள்! ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

மாரடைப்பு நோயாளிகளின் ரத்தத்தில் அதிக பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது பற்றி...

Human heart

கோப்புப் படம் - IANS

Published On :11 ஆகஸ்ட் 2026, 12:51 pm IST

மாரடைப்பு மற்றும் இதய நோய் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஒரு சமீபத்திய ஆய்வின் முடிவுகள் 'யூரோப்பியன் ஹார்ட் ஜர்னல்' என்ற இதழில் வெளியாகியுள்ளது.

அதில் சில குறிப்பிடத்தக்க முடிவுகள் வெளியாகியுள்ளன.

1. மாரடைப்பு ஏற்பட்டவர்களின் ரத்த நாளங்களில் மைக்ரோ மற்றும் நானோ பிளாஸ்டிக் துகள்கள் அதிகம் காணப்படுகின்றன.

2. மாரடைப்பு ஏற்படாத இதய நோயாளிகள் மற்றும் இயல்பான ரத்த நாளங்களைக் கொண்டவர்களைக் காட்டிலும், மாரடைப்பு ஏற்பட்டு மீண்டவர்களின் ரத்த நாளங்களில் மிகச்சிறிய அளவிலான பிளாஸ்டிக் துகள்கள் அதிக அளவில் இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

3. சுமார் 61 நோயாளிகளிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வு, சுற்றுச்சூழல் மாசுபாடு, இதய ஆரோக்கியத்தைப் பாதிக்கக் கூடும் என்பதை வலியுறுத்துகிறது.

4. மாரடைப்பு ஏற்பட்டு மீண்ட 84% பேரிடமும் ரத்த நாளங்களில் மைக்ரோ, நானோ பிளாஸ்டிக் துகள்கள் கண்டறியப்பட்டுள்ளன.

5. இஸ்கிமிக் (உறுப்பு அல்லது திசுவுக்கு ரத்த ஓட்டம் அல்லது ஆக்சிஜன் பற்றாக்குறை) இதய நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 40% பேரிடமும் இயல்பான கரோனரி தமனிகளைக் கொண்ட நோயாளிகளில் 32% பேரிடமும் மைக்ரோ மற்றும் நானோ பிளாஸ்டிக் கண்டறியப்பட்டுள்ளன.

6. மாரடைப்பு நோயாளிகளின் ரத்தத்தில் பல்வேறு வகையான பிளாஸ்டிக்குகள் அதிக அளவில் இருந்தன. இவற்றில் மிகவும் பொதுவான வகை பாலிஎத்திலீன் என்ற பிளாஸ்டிக் வகையாகும். இது பொதுவாக பேக்கேஜிங் மற்றும் நுகர்வோர் பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது.

7. அதேபோல நீண்ட காலம் காற்று மாசுபாடு அதிகமுள்ள பகுதிகளில் வாழ்ந்த நோயாளிகளின் ரத்தத்தில் மைக்ரோபிளாஸ்டிக் இருப்பதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.

8. மேலும் புகைப்பிடிப்பவர்களின் ரத்தத்தில் மைக்ரோபிளாஸ்டிக்குகள் இருப்பதற்கான வாய்ப்பு ஆறு மடங்கு அதிகமாக இருந்தது.

9. கூடுதலாக, புகைப்பிடிக்காத மற்றும் அதிக காற்று மாசுபாட்டிற்கு ஆளாகாத நோயாளிகளில் 12.5% பேருக்கு மட்டுமே அவர்களது ரத்த நாளங்களில் பிளாஸ்டிக் இருந்தது.

10. பிளாஸ்டிக் துகள்கள் மாரடைப்பைத் தூண்டுகின்றன என்பதை இந்த முடிவுகள் காட்டவில்லை என்றாலும், காற்று மாசுபாடு என்பது அழற்சி, நுரையீரல் பாதிப்பு, ரத்த நாளங்களுக்கு ஏற்படும் சேதம் ஆகியவற்றின் மூலம் இதய நோய்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்ற கவலையை இந்த ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.

Summary

Microplastics Found in blood vessels 84 percent of Serious Heart Attack Patients: Research

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.