தெலங்கானா மாநிலம் பெதப்பள்ளி மாவட்டத்தில் உள்ள கொடுருபகா கிராமத்தில் வசிக்கும் இரண்டு குழந்தைகளின் ஆன்லைன் வகுப்புக்காக ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒருவர் ஒரு தொலைக்காட்சியை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
அப்பகுதியில் உள்ள நிட்டூர் ஜில்லா பரிஷத் உயர்நிலைப் பள்ளியில் 10 மற்றும் 7 ஆம் வகுப்பு படித்து வரும் சௌமியா, மேக்னா ஆகிய இரு குழந்தைகள் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் குடிசை வீட்டில் வசிக்கிறார்கள்.
இரண்டு சிறுமிகளுக்கும் படிப்பில் மிகுந்த ஆர்வம் இருந்தாலும், அவர்கள் வீட்டில் தொலைக்காட்சியோ, ஸ்மார்ட் போனோ இல்லாததால் ஆன்லைன் வகுப்புகளில் பங்குகொள்ள முடியவில்லை. இதனால் படிக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர்.
இவர்களின் சூழ்நிலை, ஆசிரியர்களின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டபோது, கணித ஆசிரியர் திருப்பதி ராவ் மற்றும் தலைமை ஆசிரியர் எம். லக்ஷ்மி நாராயணன் ஆகியோர் உதவிக்காக ஹைதராபாத்தைச் சேர்ந்த ஜோகினிபள்ளி சீனிவாஸ் ராவ் என்பவரை தொடர்பு கொண்டனர். அவர் உடனடியாக ஒப்புக்கொண்டு அந்த குழந்தைகளுக்கு தொலைக்காட்சியை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
கரோனா பொதுமுடக்க காலத்தில் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு தரப்பு மக்களுக்கு மற்றொரு தரப்பினர் உதவுவது சற்று ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தியா - அமெரிக்கா வா்த்தக பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம்: மத்திய அரசு

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஜூன் 19-க்கு ஒத்திவைப்பு

கிணற்றில் குளித்த இளைஞா் வலிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு

எல்ஆா்ஜி கல்லூரி வாக்கு எண்ணும் மையத்துக்கு 2 அடுக்கு பாதுகாப்பு
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


