45 டிகிரியில் வாட்டி வதைக்கும் இந்தக் கோடை ராஜஸ்தான் மக்களை இப்படித்தான் பழி வாங்கிக் கொண்டிருக்கிறது. சும்மாவே தண்ணீர் பற்றாக்குறை நிலவும் ராஜஸ்தானின் புறநகர்ப்புற கிராமங்களில் கோடையும் சேர்ந்து கொள்ள தண்ணீர்ப்பற்றாக்குறை பற்றிச் சொல்லியா தெரிய வேண்டும். பற்றாக்குறை காரணமாக ஒருவர் சேகரித்து வைத்த தண்ணீரை பிறர் அபகரிக்க நினைத்து அதனால் சில தகராறுகளும் வந்து சேர... மத்யஸ்தம் செய்து வைத்து ஓய்ந்து போன கிராமப் பஞ்சாயத்தினர் ஒரு கட்டத்தில், ஊர் மக்களிடம், ‘தயவு செய்து நீங்கள் தண்ணீர் சேகரித்து வைத்துள்ள டிரம்களுக்கு பூட்டுப் போட்டுப் பாதுகாத்துக் கொள்ளுங்கள், காவலுக்கு ஆள் வைத்து வேண்டுமானாலும் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று ஆலோசனை அளிக்கவே, அதைத்தான் இப்போது அந்த மக்கள் பின்பற்றி வருகின்றனர்.