அதாவது இந்தோனேசியர்கள் தண்ணீர் பற்றாக்குறையைத் தவிர்க்க வீணாக வெட்டி வீசப்பட்ட வாழைமரத் தண்டுகளைத் தேர்ந்தெடுத்து துளைகளிட்டு அதில் மண் மற்றும் உரத்தை நிரப்பி, அந்த மண்ணில் கீரைகள் மற்றும் காய்கறி விதைகளை விதைத்து புது விதமான விவசாயமொன்றைச் செய்து வருகிறார்கள். இம்முறையில் விவசாயம் செய்யும் போது செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றத் தேவையில்லை வாழைமரத்தண்டில் இருக்கும் நீர்ச்சத்தே செடிகள் வளரப் போதுமான நீர்த்தேவையை வழங்கி விடுகின்றன என்பதோடு பயன்படுத்தி முடிவுக்கு வரும் வாழைமரத்தண்டுகளை அப்புறப் படுத்த வேண்டிய அவசியமும் அவர்களுக்கு இல்லாமலாகிறது.