ஷாப்பிங் மால் ஒன்றில் தனது சின்னஞ்சிறு மகனுடன் எஸ்கலேட்டரில் ஏறிக் கடக்கிறார் ஒரு தந்தை. அவர்கள் எஸ்கலேட்டரில் இருந்து இறங்கி தரையில் கால் வைத்த அடுத்த நொடியில் காலடியில் தரை நழுவினாற்போல எஸ்கலேட்டர் அவர்கள் கண்முன்னே அப்படியே நிலைகுலைந்து சரிந்து நொறுங்குகிறது. அச்சத்தில் உறையும் அந்அவர்கள் தத் தந்தையும் மகனும் ஓ மை காட் நாங்க தப்பிச்சிட்டோம் என்று அந்த இடத்தில் இருந்து விரைகிறார்கள். பிறகு நொறுங்கிச் சிதறிய எஸ்கலேட்டரை மாலின் பணியாளர்கள் வந்து பார்வையிடுகிறார்கள். இப்படியொரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைக் கண்டு கருத்து தெரிவிப்பவர்கள், ‘நீங்கள் ஏன் படிகளைப் பயன்படுத்தக் கூடாது?’ என்றும், நல்ல வேளை மிக அருகில் நெருங்கிக் கொண்டிருந்த ஆபத்தில் இருந்து தப்பிய தந்தைக்கும், மகனுக்கும் வாழ்த்துக்கள், என்றும் ஜஸ்ட் மிஸ்டு’ என்றும் கருத்துரையிட்டு தங்களது வியப்பையும் அதிர்ச்சியையும் பகிர்ந்து கொண்டுள்ளார்கள்.