தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

காய்ச்சலா ஒரு பாராசிட்டமால் போதும் என்று நினைக்கிறீர்களா?

சிறுநீரக பாதிப்பு என்று வரும் நோயாளிகளில் 8  முதல் 10  சதவிகிதம் பேர்களுக்கு கடுமையான பாதிப்புகளுக்கு தொடர்ந்து  பாராசிட்டமால் மருந்துகள் எடுத்துக் கொள்வதே காரணங்களாக இருக்கின்றன.

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 10:01 am

கார்த்திகா வாசுதேவன்

பாராசிட்டமால் மாத்திரைகளையோ, சிரப்களையோ தொடர்ந்து உபயோகிப்பவர்களுக்கு  லிவர் மற்றும் கிட்னி தொடர்பான பிரச்சினைகள் வர வாய்ப்பிருப்பதாக சமீபத்திய மருத்துவ ஆய்வறிக்கைகள் எச்சரிக்கின்றன.

இனி மேல் பாராசிட்டமால் (அசிட்டமினோபென்) மருந்துகளை தயாரிப்பவர்கள் தங்களது நுகர்வோர்களுக்கு  இந்த மருந்தை உட்கொள்வதால் லிவர் ,கிட்னி டேமேஜ் மற்றும் அலர்ஜியினால் உண்டாகும் பக்க விளைவுகள் ஏற்படும் என்று ஒவ்வொரு மருந்து பாட்டில் ரேப்பர்கள் மற்றும் மாத்திரைப் பட்டைகளில் எச்சரிக்கை வெளியிட வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது .
 
டாக்டர்கள் பரிந்துரைக்கும் பிரஸ்க்ரிப்சன்களை பேசன்டுகள் பெரும்பாலும் சரியாகப் புரிந்து கொள்வதே இல்லை. காய்ச்சல் என்று வரும் கைக்குழந்தைகளுக்கு டாக்டர்கள் 5  ml   பாராசிட்டமால் டிராப்ஸ்( சொட்டு மருந்து) பரிந்துரைத்தால்  குழந்தையின் பெற்றோர்களில்  சிலர் போதிய கவனமின்றி தவறுதலாக 5  ml  அளவுக்கு  பாராசிட்டமால் சிரப் (டானிக்)  கொடுத்து விடுகிறார்கள். ட்ராப்ஸை விட இந்த சிரப்புகள் அதிக செறிவானவை. இத்தனை செறிவான மருந்தை உட்கொள்வதால் குழந்தைக்கு அலர்ஜியாகி பக்க விளைவுகள் ஏற்பட்டு மறுபடியும் மருத்துவரை நாடும் நிலை ஏற்பட்டு விடுகிறது மேலும் இப்படியே தொடர்ந்து மருந்துகளை கொடுத்து வந்தால் கடைசியாக அது கடுமையான ரீனல் டிஸ்ஆர்டர்களில் கொண்டு விடுகிறது. பெரும்பான்மையான லிவர் மற்றும் கிட்னி டேமேஜ்கள்  ஏற்பட இப்படியான கவனக்குறைவே முதலும் முக்கியமுமான  காரணமாகி விடுகிறது .
 
இவை தவிர லேசான காய்ச்சலுக்கும் கூட டெம்பரேச்சர் சோதித்துப் பார்க்காமல் டாக்டர்கள் கடுமையான காய்ச்சலுக்குப் பரிந்துரைத்த அதே அளவு பாராசிட்டமால்  மருந்தை உட்கொள்வதாலும் மேற்சொன்ன விளைவுகள் ஏற்படலாம். பெயின் கில்லர்கள் எடுத்துக் கொள்பவர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் தங்களது கிட்னி ஆரோக்யமாக இருக்கிறதா எனத் தொடர்ந்து பரிசோதிக்கத் தவறக் கூடாது. ஏனெனில் இன்றைய நிலையில் சிறுநீரக பாதிப்பு என்று வரும் நோயாளிகளில் 8  முதல் 10  சதவிகிதம் பேர்களுக்கு கடுமையான பாதிப்புகளுக்கு தொடர்ந்து  பாராசிட்டமால் மருந்துகள் எடுத்துக் கொள்வதே காரணங்களாக இருக்கின்றன என்பதை மறுக்க முடியாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.