ஜல்லிக்கட்டு போராட்டத்தின் வாயிலாக மக்கள் மத்தியில் நாட்டு மாடுகள் மற்றும் ஜெர்ஸி மாடுகள் குறித்து ஓரளவுக்கு விழிப்புணர்வு வந்திருந்தாலும், இந்த விழிப்புணர்வை வைத்துக் கொண்டு என்ன செய்வது? என்ற குழப்பமும் வந்திருப்பதை மறுக்க முடியாது. இப்போதைய இந்திய மக்களின் பால் மற்றும் பால் பொருட்கள் தேவையை மிகுதியாக நிவர்த்தி செய்து கொண்டிருப்பது ஜெர்ஸி பசுக்களின் மூலமாகக் கிடைக்கும் பால் தான். இவற்றை இனிமேல் அருந்துவதற்கு இல்லையென்றோ, அல்லது இவற்றின் மூலமாகத் தயாரிக்கப்ப்படும் பனீர், பாலாடைக் கட்டிகள், நெய், வெண்ணெய், உள்ளிட்ட பால் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என்றோ நம்மால் உடனடியாகப் புறக்கணித்து விட முடியுமா என்பதும் யோசிக்கப்பட வேண்டிய விசயமே!