இந்த ஊர்வலம் மணமகள் வீட்டார், தமது வருங்கால மாப்பிள்ளைக்கு மரியாதை செய்து மணமகள் வீட்டுக்குள் அழைப்பதுடன் நிறைவு பெறும். இப்படியான மணமகன் வரவேற்பு விழாவுக்கு வட இந்தியத் திருமணங்களில் ‘பராத்’ என்று பெயர். அதைப் பற்றி அறிந்திராதவர்கள் டெய்ரி மில்க் விளம்பரம் ஒன்றில் மாமியாரும், மருமகளும் ஒரு திருமண ஊர்வலத்தின் முன் சாக்லெட் சாப்பிட்டு விட்டு நடனமாடுவார்களே அதை ஞாபகப் படுத்திக் கொள்ளுங்கள். அந்த விளம்பரத்தில் குதிரையில் மணமகன் உட்கார்ந்திருக்க ஊர்வலம் நடக்கும். இதற்குப் பெயர் தான் ‘பராத்’ இது பொதுவாக மணமகனுக்கு முதல் மரியாதை செய்து மணப்பெண் வீட்டுக்கு அழைக்கும் நிகழ்வாக அங்கு தொன்று தொட்டு நடத்தப்படுவது. இந்த வழக்கத்தைத் தான் இந்த ராஜஸ்தானிய மணப்பெண் துணிந்து உடைத்தெறிந்து மணமகனுக்குப் பதிலாக மணமகளான தான் அலங்கரிக்கப்பட்ட குதிரையில் ஏறி தனது உறவினர்கள் புடைசூழ மணமகன் வீட்டை அடைந்து அவர்கள் தரும் முதல் மரியாதையை ஏற்றுக் கொண்டிருக்கிறார். இது ராஜஸ்தான் போன்ற ஒரு மாநிலத்தில் நிச்சயம் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அளிக்கக் கூடிய புரட்சிகரமான மாற்றமே!