சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

‘என் கணவன், என் தோழன்’ சீரியல் ஜோடிகளிடையே பிரிவா?!

கடைசியில் இந்தச் சம்பவத்தின் கிளைமாக்ஸ் படப்பிடிப்புக் குழுவினர் நடுவே சந்தியா சூரஜைக் கன்னத்தில் அறையும் அளவுக்கு சென்று விட்டது.

News image
Updated On :2 டிசம்பர் 2016, 7:15 am

‘என் கணவன் என் தோழன்’ என்றொரு தொடர் விஜய் டி.வி யில் ஒளிபரப்பாகிறது. இல்லத்தரசிகள் பலருக்கும் பிடித்தமான தொடர். தொடரை விட இதில் நடித்திருக்கும் ஹீரோ சூரஜ், ஹீரோயின் சந்தியா இருவரும் பல வருடங்களாக  ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த ஜோடிகளாக இருந்து வந்தார்கள். சில வாரங்களுக்கு முன் இந்த ஜோடிக்கு நடுவே படப்பிடிப்பின் போது நடந்த சிறு  மனஸ்தாபம் முற்றி இனி இவர்கள் இருவரும் சேர்ந்த்து நடிப்பதாக இல்லை எனும் முடிவுக்கு வந்திருக்கிறார்களாம். தொடரில் ரீல் ஜோடிகளாக இருந்தாலும் இவர்களின் ஜோடிப் பொருத்தத்தை ரசித்துப் பார்த்து சீரியலை டி.ஆர்.பி யில் ஹிட் அடிக்க வைத்த இந்த தொடரின் ரசிகர்களுக்கு இது ஏமாற்றமளிக்கும் செய்தியே!
‘குஷி’ பட ஜோதிகா போல சில வாரங்களுக்கு முன் இந்தத் தொடருக்கான படப்பிடிப்பின் போது சூரஜாக நடுத்த ஹீரோ (ரஷித் அனாஸ்) தன்னை முறைகேடாகத் தொட்டார் எனக்கூறி ஹீரோயின் சந்தியா( தீபிகா சிங்) பெரும் மனவருத்தத்தில் இருந்தார். சும்மாவே மனவருத்தத்தில் இருக்கும்போது, உடன் நடித்த மற்றொரு சக நடிகை கனிகா மஹேஸ்வரி சந்தியாவிடம் சூரஜைப் பற்றி மேலும் மோசமாகப் பேச, கடைசியில் இந்தச் சம்பவத்தின் கிளைமாக்ஸ் படப்பிடிப்புக் குழுவினர் நடுவே சந்தியா சூரஜைக் கன்னத்தில் அறையும் அளவுக்கு சென்று விட்டது. இப்படி ஒரு மோசமான நிலையில் அடுத்தடுத்து நடைபெற்ற படப்பிடிப்புகளின் போது சூரஜும், சந்தியாவும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவே இல்லையாம். கடைசியில் இந்தப் பிரச்சினை;  இனி எப்போதும் இருவரும் சேர்ந்து நடிப்பதாக இல்லை என்பதில் வந்து முடிந்திருக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.