கிராமி விருது பெற்ற பாப் பாடகர் 'ஜஸ்டின் பைபர்' சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் கணக்கை முடக்குவதாக அறிவித்திருக்கிறார். வெறும் அறிவிப்பு மட்டுமல்ல இன்ஸ்டாகிராம் ஒரு பிசாசு! என்று அதைச் சாடி விட்டு அதிலிருந்து வெளியேறி இருக்கிறார். மேலும் சமூக வலைத்தளம் ஒரு நரகம்! அந்த நரகத்திலிருந்து தான் பலமுறை வெளியேற முயன்றும் முடியாமல் தவித்ததாகவும், தற்போது தான் அதிலிருந்து தப்பிக்க விடிவு காலம் பிறந்திருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
செவ்வாய் அன்று லண்டனில் ஒரு மேடை நிகழ்ச்சியில் பேசும் போது மீண்டும் மேற்சொன்னதையே உறுதிப்படுத்தி இருக்கிறார். நான் 90 சதம் உறுதியாகச் சொல்வேன். இந்து போன்ற சமூக வலைத்தளச் செயல்பாடுகளில் ஈடுபடும் போது நாம் நரகத்திற்குத் தான் அனுப்பப்படுகிறோம். சொல்லப் போனால் இன்ஸ்டாகிராம் சர்வரின் உள்ளே வைத்துப் பூட்டப் படுகிறோம், இப்படித் தான் நான் டிஜிட்டல் மீடியாவில் சிக்கிக் கொண்டேன். பிறகு அதிலிருந்து மீண்டு எழுந்து நான் என் வழியே செல்ல நினைத்தாலும் என்னால் முடியவில்லை. என்றும் புலம்பி இருக்கிறார்.

கடந்த ஆகஸ்டில் இன்ஸ்டாகிராமில் இருந்து தற்காலிகமாக வெளியேறிய ஜஸ்டின் இரு வாரங்களில் மீண்டும் தனது முன்னாள் காதலி செலினா கோம்ஸ்காக இன்ஸ்டாகிராம் கணக்கில் உள் நுழைந்திருக்கிறார். பிறகு என்ன நடந்ததோ? உடனடியாக தனது இன்ஸ்டாகிராம் கணக்கை முடிவுக்கு கொண்டு வந்து அங்கிருந்து வெளியேறி விட்டதாக அறிவித்திருக்கிறார்.
ஜஸ்டின் பைபருக்கும் அவரது முன்னாள் காதலி செலினா கோம்ஸுக்கும் இடையில் நடந்த இன்ஸ்டாகிராம் சண்டைக்குப் பின் தான் ஜஸ்டினின் இந்த உலகப் புகழ் பெற்ற வெளியேற்றம் நடைபெற்றதாக அவரது ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கிறார்களாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தேசியவாத காங்கிரஸ் தலைவா் கொலை வழக்கு: அமித் ஜோகிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்

ஆம்பூரில் அமைதியாக முடிந்த வாக்குப் பதிவு

பெட்ரோலியப் பொருள்கள் தடையற்ற விநியோகம்: இந்தியன் ஆயில் உறுதி
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


