17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இதயத்துக்கு இதமான சமையல் எண்ணெய் எது? மோசமானது எது?

இதயத்துக்கு இதமான சமையல் எண்ணெய் மற்றும் மோசமானது பற்றி..

News image

சமையல் எண்ணெய் - file photo

Updated On :13 மே 2026, 11:00 am IST

இதய நோயும், இதயத்தில் அடைப்பும் ரேஷன் கார்டு போல இப்போதெல்லாம் அனைவருக்கும் இருக்கிறது. காரணம் என்றால் சமையலில் பயன்படுத்தப்படும் எண்ணெய்தான் என்கிறார்கள்.

நாம் பயன்படுத்தும் சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய்கள் எதுவுமே எண்ணெய்யே இல்லை என்று கூறுகிறார்கள். வெளியில் சாலையோர உணவகங்களில் பயன்படுத்தும் எண்ணெய் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டவை என்று எச்சரிக்கப்படுகிறது.

ஆனால், ஏழை மக்களுக்கு இந்த சூரியகாந்தி எண்ணெய் போன்றவையே வாங்கும் விலைக்கு விற்கப்படுவதில்லை. மற்ற எண்ணெய் விலைகளைக் கேட்கவும் முடிவதில்லை.

எனினும், இதயத்துக்கு இதமான எண்ணெய்கள் என்று மருத்துவ நிபுணர்கள் சிலர் எண்ணெய் வகைகளை பட்டியலிடுகிறார்கள். இது உடல்நிலைக்கு ஏற்ப மாறுபடுகிறது.

அதில் முதலில் இருப்பது ஆலிவ் எண்ணெய். இதில் நல்ல கொழுப்பு உள்ளது. இதனை தொடர்ந்து சமையலில் பயன்படுத்தினால் இதய நோய்கள் குணமாகுமாம். விலை காரணமாக சமையலில் பயன்படுத்த முடியாவிட்டாலும், நாள்தோறும் ஒரு அரை ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யை உணவில் சேர்த்துக் கொண்டால் இதய நோய்கள் வருவதன் அபாயம் ஓரளவுக்குக் குறையுமாம்.

நெய்.. இதில் சுத்தமான நெய் கிடைப்பதுதான் பெரிய விஷயம். சுத்தமான நெய் உணவில் சேர்க்கப்படும்போது இதயத்துக்கு நன்மை கிடைக்கிறதாம். நல்ல கொழுப்பு இருப்பதால் உடலுக்கும் நல்லது.

நெய்யைப் பொருத்தவரை தரமான நெய்யை அளவோடு சாப்பிட்டு வந்தால் உடலுக்கு நன்மையளிக்கும்.

தேங்காய் எண்ணெய் இதய நிபுணர்கள் பலரும் பரிந்துரைப்பது தேங்காய் எண்ணெய். இது உடலில் நல்ல கொழுப்பை உருவாக்கும். உணவில் தாளிப்பு போன்றவற்றுக்கு குறைந்த அளவில் தேங்காய் எண்ணெய் சேர்த்து சாப்பிடலாம். இது உடலுக்கு நல்லது என்கிறார்கள்.

சோயா எண்ணெய்யும் உடலுக்கு நன்மை அளிக்கிறது. இதில் ஒமேகா - 3, ஒமேகா - 6, ஃபேட்டி ஆசிட் ஆகியவை இருக்கிறதாம். உடலில் அதிக கொழுப்பு சேராமல் காக்கிறது. நல்ல தரமான சோயா எண்ணெய் வாங்கி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதய நோய் வராமல் தடுத்து பல்வேறு நன்மைகளையும் அளிக்கிறதாம்.

கடுகு எண்ணெய்.. பல ஆண்டுகாலமாக கடுகு எண்ணெய் சமையலறைகளில் இருந்துகொணடிருநத்துதான். ஆனால், தற்போது அதன் பயன்பாடு குறைந்துவிட்டது. யாரெல்லாம் சரியான இடைவெளியில் கடுகு எண்ணெய் எடுத்துக் கொள்கிறார்களோ அவர்களுக்கு இதய நோய் வருவதன் அபாயம் குறைவாம். வறுவலுக்கு பயன்படுத்த உகந்ததாம்.

சூரிய காந்தி எண்ணெய்.. சுத்தமான சூரிய காந்தி எண்ணெய்கள் சமையலில் பயன்படுத்தலாம். ஆனால் அளவுக்கு அதிகமாக இருக்கக் கூடாது. அதிக சூட்டில் பயன்படுத்த உகந்தது அல்ல, மீண்டும் மீண்டும் சூடுபடுத்தக் கூடாது.

பாமாயில் - அதிகக் கொழுப்பு நிறைந்திருக்கும் என்பதால், இதய நோய் மருத்துவர்கள் இதற்கு சிவப்புக் கொடி காட்டுகிறார்கள். ஆனால், இதில் விட்டமின் ஏ மற்றும் இ கலந்திருக்கிறது. இதனை உணவில் குறைந்த அளவில் சேர்த்துக் கொள்ளலாம். ஏற்கனவே இதய நோய் இருப்பவர்கள் மட்டும் தவிர்த்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

Summary

About cooking oils that are good for the heart and those that are bad..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.