ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நீதியும் நியாயமும் - புதிய சட்ட விழிப்புணர்வுத் தொடர் அறிமுகம்!

தினமணி இணையதளத்தில் நீதியும் நியாயமும் என்ற புதிய சட்டத் தொடர் அறிமுகம் செய்யப்படுகிறது...

Justice and Equity

நீதியும் நியாயமும் - Illustration

Published On :15 ஆகஸ்ட் 2026, 10:30 am IST

நாளிதழ் வாசிப்பது என்பது இன்றைய தலைமுறையினரிடையே வியப்பானதாகவும் அரிதானதாகவும் இருக்கிறது. அதேவேளை, நாளிதழ் வாசிக்காமல் ஒரு நாளைக் கடக்கவே முடியாது என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்து வரும் கடைசித் தலைமுறையும் நம்முடன் இருக்கிறது.

நாளிதழ் வாசிப்பதைப் பொழுதுபோக்கு செயலாகக் கருதிக் கொள்பவர்கள் அதிகம் வாழும் இந்தச் சமுதாயத்தில், அதனை ஒரு தவமாகக் கருதுபவர்களும் இருக்கிறார்கள்.

1967-இன் பொழுதுகளில் இரண்டு ரூபாய் பத்து பைசா சந்தா செலுத்தி, தினமணி நாளிதழ் வாசிக்கத் தொடங்கியது எனது குடும்பம்; தற்போது மூன்றாம் தலைமுறையாக ரூ. 2,800 சந்தா செலுத்தி, தினமணியுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழையும் சேர்த்து வாசித்து வருகிறோம். ஆம்! இது ஒரு சாதனை.

ஆனால் உண்மை, எனக்கும் தினமணிக்குமான உறவு என்பது கொப்பூழ்க் கொடி உறவு. வழக்கறிஞர், சமூக செயற்பாட்டாளர் என பன்முக அங்கீகாரம் எனக்குக் கிடைப்பதற்கான அத்துணை வழிகளையும் திறந்துகாட்டிய மாபெரும் வழிகாட்டி தினமணிதான்.

நாளிதழ் வாசிப்பதால் என்ன நிகழும் என்றால்? எல்லாமும் நிகழும். அதற்கான சாட்சிதான், நான். அத்தகைய தினமணி நாளிதழின் தினமணி.காம் என்ற இணையமுகத்தில் - இணையதளத்தில் ‘நீதியும் நியாயமும்’ என்ற சட்ட விழிப்புணர்வுத் தொடரின் வாயிலாக உங்களைச் சந்திக்கிறேன்.

உரிமையியல், குற்றவியல், சட்டம் இயற்றும் அவைகள், அதிகார மையங்கள் என அனைத்துத் தளங்களையும் உள்ளடக்கிய விரிவான பகுப்பாய்வாக இந்தத் தொடர் அமையும்.

ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைதோறும் இத்தொடரை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

- தமிழ்மணி ஆறுமுகம், வழக்குரைஞர்

9443645497, 9444377979

advocatetamilmani@gmail.com

Summary

A new legal series titled 'Justice and Equity' is being launched on the Dinamani website...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.