தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளரான ஆர்.பி. சௌத்ரி மறைவுக்கு நடிகரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பாளரான ஆர்.பி. சௌத்ரி(72), ராஜஸ்தானில் நிகழ்ந்த கார் விபத்தில் பலியானார்.
தமிழ், மலையாளம், தெலங்கு, கன்னடம் என பல மொழிகளில் ஏராளமான வெற்றி படங்களை தயாரித்தவர் ஆர்.பி.சௌத்ரி, சொந்த ஊரான உதய்பூருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, ஜோத்பூர் அருகே கார் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில், கார் சாலையோரம் இருந்த பாலத்தின் பக்கவாட்டு சுவரில் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த ஆர்.பி. சௌத்ரியை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து ஆர்.பி.சௌத்ரி உடல் புதன்கிழமை சென்னை தியாகராயர் இல்லத்துக்கு கொண்டுவரப்பட்டு, குடும்பத்தினரின் இறுதி அஞ்சலிக்கு பின்னர் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
ஆர்.பி.சௌத்ரி மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கமல்ஹாசன் இரங்கல்
அவரது மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள பதிவில்,
தென்னிந்திய திரைப்படத் தயாரிப்பாளர்களில் சிகரமாகத் திகழ்ந்த ஆர்.பி.சௌத்ரி சாலை விபத்தில் நம்மைவிட்டுப் பிரிந்த செய்தி அதிர்ச்சியையும் சோகத்தையும் தருகிறது.
சினிமாவில் புது முயற்சிகளுக்குத் தயங்காத துணிச்சல்காரர்; பலரை அறிமுகம் செய்தும் பலருக்குத் திருப்புமுனை ஏற்படுத்தியும் நிலைநிறுத்தியவர்; சாதிக்க விரும்பும் இளம் கலைஞர்களுக்குச் சரணாலயமாக இருந்தவர் இப்படி நம்மை விட்டு பிரிந்தது தாங்கவொண்ணாத் துயர்.
அன்புத் தந்தையை இழந்து வாடும் தம்பி ஜீவா, தம்பி ரமேஷ் மற்றும் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
Summary
Kamal Haasan was shocked to hear the news of RB Choudary's accident. In his tribute, he talked about how the producer was instrumental in introducing...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி உடலுக்கு விஜய் நேரில் அஞ்சலி!

இது ஆர். பி. சௌத்ரி போட்ட பிச்சை... கண்கலங்கிய விக்ரமன்!

"தலைவன் இருக்கின்றான்" - கமல் தேர்தல் பிரசார பாடல் வெளியீடு!
விஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

ஆர். பி. செளத்ரிக்கு அஞ்சலி செலுத்தியபின் Rajinikanth பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை


