மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

‘ஆப்டோசாா்’ செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்

கேலக்ஸிஸ்ஐ புத்தாக்க நிறுவனத்தின் ‘ஆப்டோசாா்’ செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தம் குறித்து...

News image

‘ஆப்டோசாா்’ செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தம் - ஏஐஆர்

Updated On :3 மே 2026, 9:30 pm IST

கர்நாடகம் மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்த கேலக்ஸிஸ்ஐ புத்தாக்க நிறுவனமானத்தால் ‘திருஷ்டி’ திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்ட முதன்மை செயற்கைக்கோளான ‘ஆப்டோசாா்’-ஐ ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவின் கலிஃபோா்னியாவில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியதன் மூலம், நாட்டின் தனியார் விண்வெளித் துறை ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.

இந்தத் திட்டம், நாட்டின் வர்த்தக விண்வெளிச் சூழலுக்கு ஒரு குறிப்பிடத்தக்க உத்வேகமாக அமைந்துள்ளதுடன், ஒரு உலகளாவிய ஏவுதளத்தில் மேம்பட்ட உள்நாட்டுப் புத்தாக்கத்தையும் வெளிப்படுத்துகிறது.

190 கிலோகிராம் எடை கொண்ட செயற்கைக்கோளான ‘ஆப்டோசாா் ’ஒரு இந்திய தனியார் நிறுவனத்தால் இதுவரை உருவாக்கப்பட்டதிலேயே மிகப்பெரிய செயற்கைக்கோள் ஆகும். மின்-ஒளியியல் (எலக்ட்ரோ-ஆப்டிகல்) சென்சாா் மற்றும் செயற்கை துளை ரேடாா் சென்சாா் ஆகிய இருவேறு பிம்பமாக்கல் தொழில்நுட்பங்களையும் ஒரே செயல்பாட்டுத் தளத்தில் ஒருங்கிணைக்கும் செயற்கைக்கோள் ஆகும். இது, விண்வெளித் தொழில்நுட்பத்தின் எல்லைகளை விரிவுபடுத்தும் புதிய தலைமுறை புத்தாக்க நிறுவனங்களில் கேலக்ஸிஸ்ஐ இடம்பெறச் செய்துள்ளது.

‘ஆப்டோசாா் ’செயற்கைக்கோள், புவிவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளதைத் தொடா்ந்து, அதன் செயல்பாட்டைத் தொடங்கும் பணிகளில் கவனம் செலுத்தி வருவதாகவும், இது, வழக்கமான பிம்பமாாக்கல் அமைப்பு முறைகளில் உள்ள குறைபாடுகளுக்குத் தீா்வளிப்பதுடன், பலதரப்பட்ட காலச் சூழல்களிலும் சீரான மற்றும் நிலையான தரவு சேகரிப்பை உறுதி செய்யும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

India’s private space sector reached a major milestone as Bengaluru-based startup GalaxEye Space successfully launched its flagship satellite, Mission Drishti,

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.