புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

வார பலன்கள் (மே 1 - 7) 12 ராசிகளுக்கும்! குழப்பம் நீங்கும் கடக ராசிக்கு!

இந்த வாரம் 12 ராசிக்கும் என்னென்ன பலன்கள் என்று தெரிந்துகொள்ளலாம்...

News image

ஜோதிடம் - DPS

Updated On :1 மே 2026, 5:51 am
Updated On :1 மே 2026, 5:51 am

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (மே 1 - 7) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.

1மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

பணிகளை சுறுசுறுப்புடன் செய்து முடித்துவிடுவீர்கள். பொருளாதார சிக்கல்கள் குறையும்.

உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகள் தங்கள் செயல்களில் சிறிய அலைச்சல்களைக் காண்பீர்கள்.

விவசாயிகள் விவசாய உபகரணங்களை கவனமாகப் பயன்படுத்தவும்.

அரசியல்வாதிகள் கட்சியில் தங்கள் கருத்துகளை கவனமாக வெளிப்படுத்துவீர்கள். கலைத்துறையினர் பயணங்கள் மூலம் புதிய அனுபவங்களைப் பெறுவீர்கள்.

பெண்கள் மூலம் மகிழ்ச்சிகரமான செய்திகள் கிடைக்கும். மாணவர்களுக்கு விளையாட்டுகளில் பொறுமை தேவை.

சந்திராஷ்டமம் - மே 03, 04, 05.

2ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் மறையும். அதே நேரம் பேசும்போது கவனமாக இருக்கவும்.

உத்தியோகஸ்தர்களுக்கு நிலுவையில் இருந்த ஊதியம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு கூட்டாளிகளின் ஆதரவு பெருகும். விவசாயிகளுக்கு தானிய விற்பனையில் நல்ல விலை கிடைக்கும்.

அரசியல்வாதிகள் அரசு அதிகாரிகளை அனுசரித்துச் செல்வீர்கள். கலைத்துறையினர் தங்கள் சிந்தனைகளுக்குச் செயல் வடிவம் கொடுப்பீர்கள்.

பெண்களுக்கு குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் குறைந்து நிம்மதி சூழும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்தத் தன்மை நீங்கும்.

சந்திராஷ்டமம் - மே 06, 07.

3மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

பொருளாதாரம் மேன்மையாக இருக்கும். மனதில் தன்னம்பிக்கை உயரும். குடும்பத்துடன் புனித தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்கள் உதவி செய்வார்கள். வியாபாரிகள் விற்பனை அதிகரிக்கக் காண்பீர்கள்.

விவசாயிகள் சக விவசாயிகளின் மதிப்பைப் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள்.

பெண்களுக்கு கணவர் உதவிகரமாக இருப்பார். மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

4கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

மனக்குழப்பங்களும் சஞ்சலங்களும் நீங்கி தெளிவு பிறக்கும். அரசாங்க வழியில் அனுகூலங்கள் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளில் சுறுசுறுப்பாகப் பணியாற்றி வெற்றிபெறுவீர்கள். வியாபாரிகள் புதிய கூட்டாளிகளைச் சேர்த்துக்கொள்வீர்கள். விவசாயிகள் கால்நடைகளை வாங்கி மகிழ்வீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு கட்சியில் இருந்த எதிர்ப்புகள் மறையும். கலைத்துறையினரின் வருமானம் படிப்படியாக உயரும். பெண்கள் கணவர் குடும்பத்தினரை அரவணைத்துச் செல்வீர்கள்.

மாணவர்கள் சக மாணவர்களுடன் கேளிக்கைகளில் கலந்து கொள்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

5சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

வருமானம் சீராக இருக்கும். அதே நேரம் எதிர்பாராத செலவுகளால் சேமிப்புகள் குறையும்.

உத்தியோகஸ்தர்கள் இழுபறியான வேலைகளை வெற்றிகரமாகச் செய்து முடித்து விடுவீர்கள். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் சராசரியாக இருப்பீர்கள்.

விவசாயிகளுக்கு பால் வியாபாரத்தால் பணவரவு கூடும்.

அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவை முழுமையாகப் பெறுவீர்கள். கலைத்துறையினர் சக கலைஞர்களுக்கு உதவிகரமாக இருப்பீர்கள்.

பெண்கள் கணவரின் பாசம், அன்பைப் பெறுவீர்கள். மாணவர்கள் படிப்பில் சாதனை படைப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

6கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

வருமானம் சீராக இருக்கும். அதே நேரம் எதிர்பாராத செலவுகளால் சேமிப்புகள் குறையும்.

உத்தியோகஸ்தர்கள் இழுபறியான வேலைகளை வெற்றிகரமாகச் செய்து முடித்து விடுவீர்கள். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் சராசரியாக இருப்பீர்கள்.

விவசாயிகளுக்கு பால் வியாபாரத்தால் பணவரவு கூடும்.

அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவை முழுமையாகப் பெறுவீர்கள். கலைத்துறையினர் சக கலைஞர்களுக்கு உதவிகரமாக இருப்பீர்கள்.

பெண்கள் கணவரின் பாசம், அன்பைப் பெறுவீர்கள். மாணவர்கள் படிப்பில் சாதனை படைப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

7துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்

உங்கள் எண்ணங்களில் தெளிவும், செயல்களில் ஆற்றலும் உண்டாகும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்கள் கூடுதலாக உழைக்க நேரிடும். வியாபாரிகளுக்கு கொள்முதலில் லாபம் அதிகரிக்கும்.

விவசாயிகள் செலவு குறைந்த மாற்றுப் பயிர்களைப் பயிரிட்டு பலன்பெறுவீர்கள்.

அரசியல்வாதிகள் எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். கலைத்துறையினருக்கு புதிய நட்புகளால் சந்தோஷம் கிடைக்கும்.

பெண்கள் குடும்பத்தில் நிம்மதி காண்பீர்கள். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

8விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

தொழிலில் புதிய முதலீடுகளை செய்வீர்கள். பிரிந்த உறவினர்கள் மறுபடியும் குடும்பத்துடன் இணைவார்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு மேல் அதிகாரிகளின் கெடுபிடிகள் குறையும். வியாபாரிகளுக்கு நண்பர்கள், கூட்டாளிகள் உதவுவார்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும்.

அரசியல்வாதிகளின் புகழும் செல்வாக்கும் அதிகரிக்கும். கலைத்துறையினர் தங்களின் வேலைகளில் மட்டுமே கவனமாக இருப்பீர்கள்.

பெண்கள் குடும்ப வருமானம் சிறப்பாக இருக்கக் காண்பீர்கள். மாணவர்களின் கோரிக்கைகளை பெற்றோர் நிறைவேற்றுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

9தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

வருமானம் படிப்படியாக உயரும். உடல் ஆரோக்கியம், மனவளம் இரண்டும் சிறப்பாக இருக்கும்.

உத்தியோகஸ்தர்கள் உழைப்புக்கேற்ற ஊதியத்தைப் பெறுவீர்கள். வியாபாரிகள் தொடரும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள்.

விவசாயிகள் நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தின் கவனத்தை ஈர்ப்பீர்கள்.

கலைத்துறையினர் திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். பெண்கள் குழந்தைகளின் எதிர்காலத்துக்காகச் சேமிப்புகளில் ஈடுபடுவீர்கள். மாணவர்கள் தேவையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

10மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

வருமானம் படிப்படியாக உயரும். உடல் ஆரோக்கியம், மனவளம் இரண்டும் சிறப்பாக இருக்கும்.

உத்தியோகஸ்தர்கள் உழைப்புக்கேற்ற ஊதியத்தைப் பெறுவீர்கள். வியாபாரிகள் தொடரும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள்.

விவசாயிகள் நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தின் கவனத்தை ஈர்ப்பீர்கள்.

கலைத்துறையினர் திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். பெண்கள் குழந்தைகளின் எதிர்காலத்துக்காகச் சேமிப்புகளில் ஈடுபடுவீர்கள். மாணவர்கள் தேவையான உடற்

பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

11கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

தர்ம சிந்தனை மேலோங்கும். பொது ஜன தொடர்பு பலப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளைத் திட்டமிட்டுச் செய்து முடிப்பீர்கள். வியாபாரிகளுக்கு பழைய கடன்கள் வசூலாகத் தாமதமாகும்.

விவசாயிகள் தங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களுக்கு உதவி செய்வார்கள்.

அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களின் ஆதரவு இருக்கும். கலைத்துறையினருக்கு ரசிகர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும்.

பெண்கள் சுப நிகழ்ச்சிகளில் சந்தோஷம் அடைவார்கள். மாணவர்கள் மெடிடேஷன் செய்து, ஞாபக சக்தியை வளர்த்துக் கொள்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

12மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

உடன்பிறந்தோரின் நேசத்தைப் பெறுவீர்கள். உங்கள் வாக்குக்கு நன்மதிப்பு உண்டாகும். களவுபோன பொருள்கள் திரும்பக் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரிகளுக்கு பணவரவு சீராக இருக்கும். விவசாயிகளுக்கு கால்நடைகளால் வருமானம் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் யோசித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள்.

பெண்கள் கணவரிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வீர்கள். மாணவர்கள் விளையாட்டுகளில் கவனத்துடன் ஈடுபட்டு வெற்றிபெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - மே 01, 0 2.