புதுச்சேரி: 2026 புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) அங்கம் வகிக்கும் அதிமுக இரண்டு இடங்களில் போட்டியிட ஒப்புக்கொண்டுள்ளது. யூனியன் பிரதேசத்தில் திராவிடக் கட்சி இதுவரை போட்டியிட்ட தொகுதிகளின் எண்ணிக்கையிலேயே இது மிகவும் குறைவானதாகும்.
2021 தேர்தலில் ஐந்து இடங்களில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய அதிமுக, 2026 தேர்தலில் பாஜக-என்ஆர் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட 2 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து அந்த கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளாா்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆா்.காங்கிரஸ் கட்சிக்கு 16, பாஜகவுக்கு 14 இடங்கள் என பங்கீடு நடந்தது. தனக்கு ஒதுக்கப்பட்ட 14 இடங்களில் இருந்து பாஜக அதிமுகவுக்கு 2 இடங்களை ஒதுக்கி கொடுத்துள்ளது. அந்த இரண்டு இடங்களில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளாா்.
அந்த அறிவிப்பின்படி, புதுச்சேரி அதிமுக மாநிலச் செயலா் ஆ. அன்பழகனுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இவா் உப்பளம் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவா். 2021 தோ்தலில் திமுக வேட்பாளரிடம் தோல்வி அடைந்தாா்.
இந்த நிலையில், மீண்டும் அவா் உப்பளம் தொகுதியில் அதிமுக சாா்பில் களம் காண்கிறாா்.
மேலும், அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட மற்றொரு தொகுதியான உருளையன்பேட்டை தொகுதியில் அதிமுக வேட்பாளராக அ. காந்தி அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் தோ்தல் களத்திற்கு புதியவா். மேலும், முன்னாள் அமைச்சா் ஏ.ஏழுமலையின் இளைய சகோதரா்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆா்.காங்கிரஸ் கட்சிக்கு 16, பாஜகவுக்கு 14 என்று தொகுதிகள் பங்கீடு நடந்தது. இதில் பாஜக ஒதுக்கிய இரண்டு இடங்களில் போட்டியிடுவதற்கான ஒப்பந்தத்தில் திராவிடக் கட்சியான அதிமுக கையெழுத்திட்டிருப்பது, சமீப காலங்களில் புதுச்சேரியில் அதிமுக தனது செல்வாக்கை இழந்து வருவதற்கான அறிகுறியாகவே கருதப்படுகிறது. தொழிலதிபர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் புதிதாக தொடங்கிய லட்சிய ஜனநாயக கட்சி(எல்ஜேகே) பாஜகவிடமிருந்து இரண்டு தொகுதிகளைப் பெற்றுள்ள நிலையில், அதிமுகவின் செல்வாக்கு குறைந்து வருவதை காட்டுகிறது.
1977-இல் தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே, (1973-இல் நடந்த திண்டுக்கல் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலைத் தவிர) அதன் முதல் பெரிய தேர்தல் வெற்றி புதுச்சேரியில்தான் கிடைத்தது. அங்கு 1974-இல் அதிமுக போட்டியிட்ட முதல் பேரவைத் தேர்தலில் ஆட்சிக்கு வந்தது. 1977-இல் அந்த வெற்றியை மீண்டும் தக்கவைத்தது.
அதன்பிறகு, அதன் செல்வாக்கு ஏற்ற இறக்கத்துடன் இருந்தபோதிலும், பல்வேறு கூட்டணிகளில் அங்கம் வகித்தும், யூனியன் பிரதேசத்தில் உள்ள 30 தொகுதிகளில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவாக அது ஒருபோதும் போட்டியிட்டதில்லை. அதிமுக பொதுச்செயலாளரும் மறைந்த முன்னாள் முதல்வருமான ஜெ. ஜெயலலிதாவின் மறைவுக்கு முன்பு அது சந்தித்த கடைசித் தேர்தலான 2016-இல், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய இரண்டிலும் அதே அணுகுமுறையைக் கையாண்டு, அனைத்து இடங்களிலும் தனது பிரபலமான 'இரட்டை இலை' சின்னத்தில் போட்டியிட்டது.
புதுச்சேரி பேரவைத் தேர்தலில் அதிமுக, பாஜக வெற்றி, தோல்விகள் விவரம்:
1974 பேரவைத் தேர்தலில் 21 இடங்களில் போட்டியிட்டு 12 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைத்தது. 1977 -இல் 27 இடங்களில் போட்டியிட்டு 14 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் அதிமுக ஆட்சி அமைத்தது.
1980 இல் 18 இடங்களில் போட்டியிட்டு அனைத்து இடங்களிலும் அதிமுக தோல்வியை தழுவியது.
1985 -இல் 10 இடங்களில் போட்டியிட்டு ஆறு இடங்களில் வெற்றி பெற்றது. புதுச்சேரில் பேரவைத் தேர்தலில் முதன்முதலாக 3 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக தோல்வியை தழுவியது.
1990 இல் 13 இடங்களில் போட்டியிட்ட அதிமுக 3 இடங்களில் வெற்றி பெற்றது. 8 இடங்களில் போட்டியிட்ட பாஜக அனைத்து இடங்களிலும் தோல்வியை தழுவியது.
1991 தேர்தலில் 10 இடங்களில் போட்டியிட்ட அதிமுக 6 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக போட்டியிட்ட 12 இடங்களிலும் தோல்வியை தழுவியது.
1996 இல் போட்டியிட்ட 10 இடங்களில் 3 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றது. பாஜக போட்டியிட்ட 14 இடங்களிலும் தோல்வியை தழுவியது.
2001 இல் போட்டியிட்ட 20 இடங்களில் 3 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றது. பாஜக போட்டியிட்ட 5 இடங்களிலும் ஒரு இடங்களில் வெற்றி பெற்று முதன்முதலாக புதுச்சேரி பேரவைக்குள் நுழைந்தது.
2006 இல் 18 இடங்களில் போட்டியிட்டு 3 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றது. 27 இடங்களில் போட்டியிட்ட பாஜக அனைத்து இடங்களிலும் தோல்வியை தழுவியது.
2011 தேர்தலில் 10 இடங்களில் போட்டியிட்டு 5 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றது. பாஜக 20 இடங்களில் போட்டியிட்டு தோல்வியை தழுவியது.
2016 இல் 30 இடங்களிலும் போட்டியில் அதிமுக 4 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், பாஜக போட்டியிட்ட 30 இடங்களில் தோல்வியை தழுவியது.
2021 தேர்தலில் 5 இடங்களில் போட்டியிட்ட அதிமுக அனைத்து இடங்களிலும் தோல்வி தழுவியது. ஆனால் 9 இடங்களில் போட்டியிட்ட பாஜக 6 இடங்களில் வெற்றி பெற்று புதுச்சேரி அமைச்சரவையில் இடம் பெற்றதன் மூலம் அங்கு ஒரு முக்கிய சக்தியாக உருவெடுத்தது.
இந்த தேர்தலில், பாஜகவுடனான கூட்டணியின் ஒரு பகுதியாக வெறும் ஐந்து இடங்களில் மட்டுமே போட்டியிட்டதால், அதிமுக செல்வாக்கு சரிந்தது.
Summary
The AIADMK’s state secretary in Puducherry, A Anbalagan, defended the decision to contest in just two seats – Uppalam and Orleampet – stating that it was taken in the interest of ensuring the alliance’s victory.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோவை வடக்கில் மும்முனைப் போட்டியை எதிர்கொள்ளும் வானதி சீனிவாசன்: மக்களின் ஆதரவு யார் பக்கம்?

தேர்தல் 1984 : மூன்றாவது முறையாக முதல்வர் எம்ஜிஆர்!

234 தொகுதிகளிலும் இரட்டை இலை.. 230 தொகுதிகளில் உதயசூரியன்!

மாமன்னன் அவுட்! அவிநாசிக்கு வந்த சோதனை!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



