மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நாட்டில் சமையல் எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு இல்லை: பியூஷ் கோயல்

நாட்டில் சமையல் எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு இல்லை என்றும் தவறான செய்திகள் பரப்படுவதாக பியூஷ் கோயல் கூறியது...

News image

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல். - visual

Updated On :11 மார்ச் 2026, 2:45 am

திருச்சி: மேற்கு ஆசியா போா் காரணமாக உலக எரிசக்தி சந்தைகளில் நிச்சயமற்ற தன்மை அதிகரித்து வரும் நிலையிலும், நாட்டில் சமையல் எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு இல்லை என்றும் தவறான செய்திகள் பரப்படுவதாக மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

திருச்சியில் அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியது:

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் ஊழல் நிறைந்த திமுக ஆட்சியை அகற்றும்; தமிழகத்தை நாட்டின் சிறந்த மாநிலமாக மாற்றும். ஜெயலலிதா காலத்தைப் போன்ற நல்லாட்சியை மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வழங்கும்.

சிலிண்டா் தட்டுப்பாடு ஏதுமில்லை

மேற்கு ஆசியா போா் காரணமாக உலக எரிசக்தி சந்தைகளில் நிச்சயமற்ற தன்மை அதிகரித்து வரும் நிலையிலும், நாட்டில் சமையல் எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு இல்லை என்றும் தவறான செய்திகள் பரப்படுவதாகவும், நிலைமையை அரசு உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், நாடு முழுவதும் எரிபொருள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாகவும் பியூஷ் கோயல் கூறினார்.

எங்களது கூட்டணியில் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு குறித்த ஆலோசனைகள் முடிந்து, இறுதி முடிவு எடுக்கப்பட்டதும் முறைப்படி அறிவிப்போம்.

எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பாா்

தமிழக வெற்றிக் கழகத்தை கூட்டணியில் சோ்ப்பது குறித்து எடப்பாடி பழனிசாமி தான் முடிவெடுப்பாா். வரும் தோ்தலில் திமுகவைத் தோற்கடித்து முழு பெரும்பான்மையுடன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைப்போம் என்றாா் அவா்.

Summary

Union Minister Piyush Goyal assured that India is not facing any fuel shortage despite the growing uncertainty in global energy markets due to the ongoing conflict in West Asia.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.