மமதா பானர்ஜி தன்னுடைய அரசாங்கத்தில் ஜனநாயகத்தைக் கண்டறிய வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ. பாவனா போக்ரா கூறியுள்ளார்.
மேற்கு வங்கத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் முடிவு பெற்று இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த பிப். 28 ஆம் தேதி இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது.
அந்தப் பட்டியலில் உயிரோடுள்ள வாக்காளர்கள் இறந்தவர்களாகக் குறிக்கப்பட்டுள்ளதென மமதா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த நடைமுறையை எதிர்த்து கொல்கத்தாவின் முக்கிய நகரமான தர்மதலாவில் வெள்ளிக்கிழமை (மார்ச் 6) முதல் போராட்டம் நடத்தி வருகிறார்.
இப்போராட்டத்தில் பாஜகவினர் அவர்களின் கட்சி சார்ந்த துண்டுப் பிரசுரங்களை வழங்கி வருவதாகவும் அவர்களைக் கண்டறிந்து காவல்துறையினரிடம் ஒப்படைக்கும்படியும் திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.
இது குறித்து, செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) பாஜக எம்.எல்.ஏ. பாவனா போக்ரா கூறுகையில் "மமதா பானர்ஜி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மீது குறை சொல்வதற்கு முன், முதலில் மேற்கு வங்க அரசாங்கத்தில் ஜனநாயகத்தைக் கண்டறிய வேண்டும். குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு மேற்கு வங்கத்துக்குச் சென்றார்.
ஒரு பெண்ணாகவும், மேற்கு வங்க முதல்வராகவும் அவர் நெறிமுறைகளின்படி நடந்திருக்க வேண்டும். ஆனால் அவர் அதை செய்யவில்லை. குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவின் திட்டத்தை அழிப்பது மட்டுமே மமதாவின் நோக்கமாக இருந்தது” எனத் தெரிவித்திருக்கிறார்.
Summary
Mamata should find democracy in her government: BJP MLA
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாஜகவின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது: மமதா!

பாஜக ஆட்சிக்கு வந்தால் வங்கமொழியை அழித்துவிடும்: மமதா எச்சரிக்கை
திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி

பாஜக காட்டுமிராண்டித்தனமான கட்சி! மமதா கடும் விமர்சனம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

