ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

லண்டனில் தெலங்கானா மாணவர் சடலமாக மீட்பு: உடலை தாயகம் கொண்டுவர குடும்பத்தினர் கோரிக்கை!

லண்டனில் உயர்கல்வி படித்து வந்த தெலங்கானா மாணவர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

T'gana student found dead in London, family seeks help to bring back body

கோப்புப்படம்.

Published On :27 ஜூன் 2026, 9:31 pm IST

லண்டனில் உயர்கல்வி படித்து வந்த தெலங்கானா மாணவர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம், காமரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மதுசூதன் ரெட்டி. இவரது மகன் எஸ்.ஸ்ரீநாத்(25) உயர் கல்வி பயில கடந்த 14 மாதங்களுக்கு முன்பு லண்டன் சென்றுள்ளார். ஸ்ரீநாத் ரெட்டி ஜூன் 22ஆம் தேதி இரவு பிறந்த நாள் விழா ஒன்றில் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் மறுநாள் காலை அவரது அறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீநாத் ரெட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது அறையில் உடன் இருந்தவர் கூறியதாக உறவினர் தெரிவித்தார். மேலும், ஸ்ரீநாத் ரெட்டி மரணம் குறித்து மற்ற நண்பர்களுக்கு சற்று தாமதமாகவே அறையில் இருந்தோர் தகவல் தெரிவித்துள்ளார் என்றும் அந்த உறவினர் கூறியுள்ளார்.

தனது மகனின் இறப்பிற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை எனக் குறிப்பிட்ட தந்தை, உடலை விரைவாக தாயகம் கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜூன் 22ஆம் தேதி இரவு குடும்பத்தினருடன் ஸ்ரீநாத் ரெட்டி நன்றாகதான் பேசியதாக தந்தை மதுசூதன் ரெட்டி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.