பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பாரதிராஜா மறைவு: சரத்குமார் இரங்கல்

திரைப்பட இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவுக்கு சரத்குமார் இரங்கல் குறித்து...

News image

பாரதிராஜா மறைவுக்கு சரத்குமார் இரங்கல் - டிஎன்எஸ்

Updated On :10 ஜூன் 2026, 10:49 am IST

திரைப்பட இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவுக்கு முன்னாள் எம்எல்ஏ சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கள் செய்தியில்,

புதன்கிழமை அதிகாலை மதிப்பிற்குரியவரும், திறமையானவரும், கோடிக்கணக்கான மக்களால் இயக்குநர் இமயம் என்று நேசிக்கப்படுபவருமான பாரதிராஜா மறைவு செய்தியறிந்து பேரதிர்ச்சியும், தீராத மனவேதனையும் அடைந்தேன்.

இன்று திரையுலகம் தனது பிரகாசமான ஒளிக்கதிரை இழந்து தவிக்கிறது. அவரது தொலைநோக்கு மிக்க கதை சொல்லும் திறன், தனித்துவமான கலைநயம் மற்றும் இந்தியத் திரையுலகிற்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பு, திரைப்பட உலகிலும் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களிலும் அழியாத தடத்தைப் பதித்துள்ளது.

அற்புதமான படைப்புகள் மூலம் தலைமுறைகள் தாண்டி திரைப்பட இயக்குநர்களையும், கலைஞர்களையும், ரசிகர்களையும் ஊக்குவித்த அவர் இன்று நம்முடன் இல்லை என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியாதபடி வேதனையில் தள்ளப்பட்டிருக்கிறோம்.

அவரது மறைவால் வேதனையில் வாடும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள், நண்பர்கள், திரை உலகத்தினர் அனைவருக்கும் எனது சார்பாகவும், எனது குடும்பத்தினர் சார்பாகவும், அவரது எண்ணற்ற ரசிகர்கள் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர் நம்மை விட்டு பிரிந்திருந்தாலும், திரையுலகிற்காக அவர் ஆற்றிய அசாதாரண பங்களிப்பும், அவர் விட்டுச் சென்ற கலை மரபும் என்றும் நிலைத்திருக்கும்.

அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

தமிழ் திரையுலகின் பெரும் ஆளுமையான இயக்குநர் பாரதிராஜாவின் இறுதிச் சடங்குகள் அரசு மரியாதையுடன் நடைபெற தமிழக முதல்வரை திரைத்துறை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

இந்தியத் திரையுலகின் தலைசிறந்த படைப்பாளி, தமிழ் மண்ணின் பண்பாட்டை உலகறியச் செய்த சாதனையாளரான அவருக்கு அரசு மரியாதை வழங்குவது, அவரது மகத்தான சேவைக்கும் அழியாத கலை மரபிற்கும் செலுத்தப்படும் பொருத்தமான அஞ்சலியாக அமையும் என தெரிவித்துள்ளார்.

Summary

It is with deep grief and sadness that I came to know the passing away of the most respected, most efficient, most admired Thiru.Bharathiraja Avl., in the early hour of this morning.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.