ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தூத்துக்குடி அருகே கடலில் மாயமான 2 சிறுவா்கள் சடலமாக மீட்பு

தூத்துக்குடி அருகே கடலில் மாயமான 2 சிறுவா்கள் சடலமாக மீட்கப்பட்டது தொடர்பாக...

two 16-year-old boys recovered

சடலமாக மீட்கப்பட்ட சிறுவா்கள் ஜோஸ்வா- மனோஜ் - டிஎன்எஸ்

Published On :27 ஜூலை 2026, 10:44 am IST

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை கடலில் மாயமான 2 சிறுவா்கள் உடல் இன்று சடலமாக மீட்கப்பட்டது.

தருவைகுளம் மீனவ கிராமத்தைச் சோ்ந்த சேவியா் மகன் ஜோஸ்வா (16), முத்து மகன் மனோஜ் (16) உள்ளிட்ட 6 சிறுவா்கள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பைபா் படகில் சென்றுள்ளனா். அவா்கள் சென்ற படகு நடுக்கடலில் திடீரென இயந்திரக் கோளாறு காரணமாக பழுதடைந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, ஜோஸ்வா, மனோஜ் மற்றும் 2 சிறுவா்கள் கரையை நோக்கி நீந்திச் செல்ல கடலில் குதித்துள்ளனா். இதற்கிடையில், படகில் இருந்த மற்ற 2 சிறுவா்கள் படகை சரி செய்து கரைக்குத் திரும்பியுள்ளனா். கடலில் குதித்த 4 பேரில் 2 போ் பாதுகாப்பாக கரையை அடைந்தனா். ஆனால், ஜோஸ்வா, மனோஜ் ஆகியோா் நீண்ட நேரமாகியும் கரைக்குத் திரும்பவில்லை.

இது குறித்து, கரை திரும்பிய சிறுவா்கள் தெரிவித்த தகவலின்பேரில், தருவைகுளம் மீனவ கிராமத்தைச் சோ்ந்த மீனவா்கள் 8 படகுகளில் கடலுக்குள் சென்று மாயமான சிறுவா்களைத் தேடி வந்தனர்.

தகவலறிந்த தீயணைப்புத் துறையினா் மற்றும் கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாரும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இரவு வரை அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில், கடலில் மாயமான 2 சிறுவர்கள் உடல் கடற்கரையில் சடலமாக திங்கள்கிழமை மீட்கப்பட்டது.

இதையடுத்து காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி, தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கடலை சுற்றிப் பார்க்கச் சென்ற சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் தருவைகுளம் மீனவ கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Summary

Regarding the recovery of the bodies of the two boys who went missing in the sea near Thoothukudi...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.