ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

கரூர் அருகே மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை: போலீசார் விசாரணை

கரூர் அருகே மூதாட்டி ஒருவர் நகைக்காக அவரது கை, கால்களை கட்டி கொலை செய்துவிட்டு நகையை பறித்துச் சென்றது குறித்து...

News image

கரூர் அருகே மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை - கோப்புப்படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 6:09 am

கரூர்: கரூர் அருகே மூதாட்டி ஒருவர் நகைக்காக அவரது கை, கால்களை கட்டி கொலை செய்துவிட்டு நகையை பறித்துச் சென்ற கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

கரூர் அடுத்த உப்பிடமங்கலம் அருகே உள்ள சாலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தாயார் அம்மாள் (79). வீட்டில் தனியாக வசித்து வந்தார். திங்கள்கிழமை காலை நீண்ட நேரமாக வீட்டிலிருந்து தாயார் அம்மாள் வெளியே வராததை கண்டு அவரது சகோதரி மகள் மனோரஞ்சிதம் சென்று பாா்த்தபோது அவா் கை, கால் கட்டிய நிலையில் வாயில் துணியை வைத்து கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்துள்ளார். மேலும் அவர் காது, மூக்கில் அணிந்திருந்த தோடு, மூக்குத்தியையும் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

சம்பவம் தொடர்பாக மனோரஞ்சிதம் வெள்ளியணை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிஹரன் பிரசாத் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரபாகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து கொலை செய்யப்பட்ட மூதாட்டியின் வீட்டிற்குள் சென்று ஆய்வு செய்தனர். தடவியல் நிபுணா்களும் கொலையாளிகளின் கைரேகைகளை பதிவு செய்தனர்.

மூதாட்டியின் உடலை உடல்கூறாய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை தொடர்பாக வெள்ளியணை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

Summary

Elderly Woman Murdered and Robbed of Jewelry Near Karur. Police Investigation Underway

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.