தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில் சித்திரை உத்திரப் பெருவிழா உற்சவம் தொடக்கம்!

காஞ்சிபுரம் அருள்மிகு கச்சபேஸ்வரர் பெருமான் சித்திரை உத்திரப் பெருவிழா உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது குறித்து...

News image

பக்தர்களுக்கு அருள் பாலித்த சுந்தராம்பிகை உடனுறை கச்சபேஸ்வரர் - டிஎன்எஸ்

Updated On :24 ஏப்ரல் 2026, 6:15 am

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஸ்ரீ ஸ்ரீ சுந்தராம்பிகை உடனுறை அருள்மிகு கச்சபேஸ்வரர் பெருமான் சித்திரை உத்திரப் பெருவிழா உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கோயில் நகரம் எனக் கூறப்படும் காஞ்சிபுரத்தில் பல்வேறு திவ்ய தேசங்களும் புகழ்பெற்ற பரிகார தளங்களும் அமைந்துள்ளது. அதுமட்டுமில்லாத ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா பல்வேறு திருக்கோயில்களில் 15 நாள்கள் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தங்கக் கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து சிவபெருமானின் வாகனமாகிய நந்தியின் உருவம் பொறித்த கொடி
தங்க கொடிமரத்தில் ஏற்றி வைக்கப்பட்டது.

தங்கக் கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து சிவபெருமானின் வாகனமாகிய நந்தியின் உருவம் பொறித்த கொடி தங்க கொடிமரத்தில் ஏற்றி வைக்கப்பட்டது. - டிஎன்எஸ்

காஞ்சியில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றானதும், திருமால் ஆமை வடிவில் வந்து சிவபெருமானாகிய ஈஸ்வரனை வணங்கி பேறு பெற்ற, திருத்தலமான காஞ்சிபுரம் சுந்தராம்பிகை உடனுறை கச்சபேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை உத்திர பெருவிழா உற்சவம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான சித்திரை உத்திர பெருவிழா உற்சவத்தின் தொடக்க விழாவாக வெள்ளிக்கிழமை(ஏப்.24) அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சித்திரை உத்திர பெருவிழா உற்சவத்தை முன்னிட்டு கச்சபேஸ்வரருக்கும் சுந்தராம்பிகை அம்மனுக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்து சிறப்பு அலங்காரத்தில் கொடி மரத்தடியில் எழுந்தருளச் செய்தனர்.

இதைத்தொடர்ந்து சிவாச்சாரியார்கள் புனித நீர் கலசங்கள் வைத்து தங்கக் கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து சிவபெருமானின் வாகனமாகிய நந்தியின் உருவம் பொறித்த கொடியை தங்க கொடிமரத்தில் ஏற்றி வைத்து சித்திர உத்திரப் பெருவிழா உற்சவத்தை தொடங்கி வைத்தனர்.

இதை தொடர்ந்து சுந்தராம்பிகை உடனுறை கச்சபேஸ்வரர், சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

சிறப்பு மலர் அலங்காரத்தில் உற்சவமூர்த்திகள் எழுந்தருள கொடிமரத்திற்கு வேத மந்திரங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் மேற்கொண்டு சிவாச்சாரியார்களால் கொடியேற்ற சிறப்பாக நடைபெற்றது.

சித்திரை உத்திரப் பெருவிழா உற்சவத்தை முன்னிட்டு நாள்தோறும் காலை,மாலை வேளைகளில் சூரியபிரபை, சந்திரபிரபை, பூத வாகனம், திருக்கயிலைக் காட்சி, நாக வாகனம், இடப வாகனம், அதிகார நந்தி சேவை, சப்பரம், யானை வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதி உலா வர உள்ளார். மே மாதம் மூன்றாம் தேதி வெள்ளித் தேர் வீதி உலா வைபவம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.