மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சபரீசன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் டி.கே. சிவக்குமார் பங்கேற்பு!

சபரீசன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் கர்நாடகம் துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் பங்கேற்து குறித்து...

News image

சபரீசன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற கர்நாடகம் துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் - டிஎன்எஸ்

Updated On :16 ஏப்ரல் 2026, 10:17 am

காங்கிரஸ் வேடபாளரை ஆதரித்து பிரசாரம் செய்ய கோவை வந்த கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், சபரீசன் நடத்திய களப்பணி ஆலோசனையில் பங்கேற்றார்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஏப்ரல் 18-ஆம் தேதி கோவை மாவட்டம் மாபெரும் அரசியல் போா்க்களமாக மாறவுள்ளது. நாட்டின் முக்கியத் தலைவா்களான பிரதமா் நரேந்திர மோடியும், தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினும் ஒரே நாளில் கோவை மாவட்டத்தில் பிரசாரம் செய்யவிருப்பது தோ்தல் களத்தை உச்சகட்டப் பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு சரியாக ஒருவாரம் இருக்கும் நிலையில், பரிசு கூப்பன்கள் மற்றும் பரிசுப் பொருள்களை வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் மறைமுகமாக விநியோகித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கோவை மற்றும் திருப்பூர் தேர்தல் கள நிலவரம் குறித்து கட்சியில் எந்தவித பொறுப்பிலும் இல்லாத முதல்வர் மு.க. ஸ்டாலினின் மருமகன் சபரீசன், கோவையில் பந்தய சாலையில் அமைந்துள்ள செந்தில் பாலாஜியின் தற்காலிக வீட்டில் திமுக வேட்பாளர்கள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்களை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த களப்பணி ஆலோசனையில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்ய கோவை வந்த கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் பங்கேற்றார்.

DK Shivakumar Participates in Consultation Meeting Conducted by Sabareesan ...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.