பெயர் மாற்றத்தைவிட சிந்தனை மாற்றமே தேவை: முதல்வர் ஸ்டாலின்!
நாடு முழுவதும் ஆளுநர் மாளிகைகளின் பெயர்களை மக்கள் பவன் என பெயர் மாற்றம் செய்வது தேவையில்லாதது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளது தொடர்பாக...
நாடு முழுவதும் ஆளுநர் மாளிகைகளின் பெயர்களை மக்கள் பவன் என பெயர் மாற்றம் செய்வது தேவையில்லாதது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளது தொடர்பாக...
By இணையதளச் செய்திப் பிரிவு
Venkatesan
நாடு முழுவதும் ஆளுநர் மாளிகைகளின் பெயர்களை மக்கள் பவன் என பெயர் மாற்றம் செய்வது தேவையில்லாதது என தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், பெயர் மாற்றத்தைவிட சிந்தனை மாற்றமே தேவை என தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுப்படி, அனைத்து மாநில ஆளுநர், துணை நிலை ஆளுநர் மாளிகைகள் ராஜ்பவன் அல்லது ராஜ் நிவாஸ்) என்பதை லோக் பவன் அல்லது லோக் நிவாஸ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இது நடைமுறைக்கு வந்துள்ளது.
இதனிடையே, தமிழக ஆளுநர் மாளிகையின் பெயர் மக்கள் பவன்(லோக் பவன் அல்லது லோக் நிவாஸ்) என மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், ஆளுநர் மாளிகை மக்கள் பவன்(ராஜ்பவன் - லோக் பவன்) என பெயர் மாற்றம் செய்யப்பட்டிருப்பதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள கண்டன பதிவில்,
"பெயர் மாற்றத்தைவிட சிந்தனை மாற்றமே தேவை"
சட்டமன்றம்=மக்கள் மன்றம்! சட்டமன்றத்தை மதிக்காதவர்கள், "மக்கள் மாளிகை" என பெயர் மாற்றுவது கண்துடைப்பா? மக்களாட்சித் தத்துவத்தின் கண்களில் மண்ணைத் தூவுவதற்கா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளையும், மக்களின் விருப்பத்தையும் நிறைவேற்ற இறையாண்மையுள்ள சட்டமன்றத்தையும் மதிப்பதுதான் இப்போதைய தேவை! சிந்தனையிலும் செயலிலும் மாற்றம் இல்லையெனில், இதுவும் தேவையற்றதே! என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
A change in thinking is needed rather than a name change says Chief Minister Stalin
டிட்வா புயல்: இலங்கை மக்களுக்குத் துணை நிற்க தமிழ்நாடு தயார்! முதல்வர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது