டிட்வா புயல் எதிரொலி: எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?
டிட்வா புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு சனிக்கிழமை (நவ.29) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.
டிட்வா புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு சனிக்கிழமை (நவ.29) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.
By இணையதளச் செய்திப் பிரிவு
Venkatesan
டிட்வா புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு சனிக்கிழமை (நவ.29) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.
டிட்வா புயலைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அவசியமின்றி மக்கள் வெளியே வர வேண்டாம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர், நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, பெரம்பலூர், ஆகிய மாவட்டங்களில் சனிக்கிழமை(நவ.29) பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மழை நிலவரத்தை பொறுத்து விடுமுறை அறிவிப்பை அந்தந்த மாவட்ட நிர்வாகமே அறிவிக்கும் என்று தெரிவித்துள்ளது.
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
தஞ்சை, விழுப்புரம், அரியலூர், திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், ராமேசுவரம், ஆர்.எஸ்.மங்களம் மற்றும் திருவாடனை வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தும். மேலும், எந்த பள்ளிகளும் சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
cyclone ditwah: which districts are schools and colleges closed today
டிட்வா புயல்: 4 மாவட்டங்களுக்கு இன்று சிவப்பு எச்சரிக்கை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது