21 Dec, 2025 Sunday, 11:43 AM
The New Indian Express Group
தற்போதைய செய்திகள்
Text

தமிழ்நாடு முழுவதும் தியாகச் சுவர் எழுப்பப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியம்

PremiumPremium

உடல் உறுப்பு கொடையாளர்களை போற்றும் வகையில் தமிழ்நாடு முழுவதும் தியாகச் சுவர் எழுப்பப்படும்...

Rocket

சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் திறந்து வைக்கப்பட்டுள்ள உடல் உறுப்பு கொடையாளர்ளை போற்றும் வகையில் திறந்து வைக்கப்பட்டுள்ள தியாகச் சுவர்.

Published On07 Nov 2025 , 9:01 AM
Updated On07 Nov 2025 , 9:01 AM

Listen to this article

-0:00

By இணையதளச் செய்திப் பிரிவு

Venkatesan

உடல் உறுப்புத் தானத்தில் உலகிலேயே தமிழ்நாடுதான் முதலிடம் என தெரிவித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், உடல் உறுப்பு கொடையாளர்களை போற்றும் வகையில் தமிழ்நாடு முழுவதும் தியாகச் சுவர் எழுப்பப்படும் என கூறினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, உடல் உறுப்பு தானம் செய்த கொடையாளர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் நிறுவப்பட்ட கொடையாளர்களின் பெயர்கள் பொறித்த மகத்தான தியாகச் சுவரை வியாழக்கிவமை (நவ.6) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து அறநிலையங்கள் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் திறந்து வைத்து மரியாதை செய்தனர்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுடன் பேசுகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் எந்த ஒன்றையும் சொல்வதற்கு முன்னால் தாமே செய்து காட்டும் மிகச்சிறந்த மானுடப் பண்பில் உயர்ந்தவர். அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் 2009 ஆம் ஆண்டே உடல் தானம் செய்துள்ளார் என்பது நாம் எல்லாம் நினைந்து பெருமைப்பட தக்க வரலாற்று நிகழ்வாகும்.

முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது துணைவியார் துர்க்கா ஸ்டாலினும் 2009 ஆகஸ்ட் 28 இல் சென்னையில் தனியார் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் தங்களுடைய வாழ்நாள் இறுதியில் உடல் தானம் வழங்குவதற்கான உறுதிமொழிப்படிவத்தில் கையெழுத்திட்டார்கள். அந்த மகத்தான நிகழ்வு அப்போது மிகப்பெரிய பாராட்டுகளையும் வரவேற்புகளையும் அவர்கள் இருவருக்கும் பெற்றுத்தந்தது.

அன்றைய நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “உடல் உறுப்புகளைத் தானம் செய்வது இன்று நேற்றல்ல கடந்த கால வரலாற்றிலும் இடம் பெற்றுள்ளது. மன்னர்கள், நாயன்மார்கள் உறுப்புகளைத் தானம் செய்துள்ளனர். கண்ணப்ப நாயனார் தனது இரண்டு கண்களையும் தானமாக வழங்கியதாகப் புராணம் கூறுகிறது.

இன்றைய அறிவியல் வளர்ச்சி காரணமாக ஒருவர் உடலில் உள்ள உறுப்புகளை எடுத்து வேறு ஒருவருக்குப் பொருத்தி உயிர் வாழ வைக்கும் சம்பவங்கள் பெருகி வருகின்றன” என்று குறிப்பிட்டார்கள்.

“2008 செப்டம்பர் மாதம் திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த ஹிதேந்திரனுக்கு சாலை விபத்தில் மூளைச் சாவு ஏற்பட்டது. அவரது இதயம் மாற்று அறுவை சிகிச்சை மூலம் பெங்களூருவில் உள்ள ஒரு சிறுமிக்கு பொருத்தப்பட்டது. சென்னை மருத்துவர்களின் இந்த சாதனையை மறக்க முடியாது. அவரது பெற்றோரின் நற்செயலை நான் நேரில் அவர்களது வீட்டுக்குச் சென்று பாராட்டினேன். அவரது பெற்றோருக்குச் சுதந்திர நாள் விழாவில் விருது வழங்கி அன்றைய முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் சிறப்பித்தார்கள் என்று குறிப்பிட்டார்கள்.

உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு - அரசு மரியாதை

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உடலுறுப்பு தானம் செய்பவர்களைப் பாராட்டும் வகையில், கடந்த 2023 செப்டம்பர் 23 ஆம் தேதி உடலுறுப்பு தானம் செய்பவர்களின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படும் என்று அறிவித்தார்கள்.

அந்தவகையில் உடலுறுப்பு தானம் செய்தவர்களின் திருவுடலுக்கு மாவட்ட ஆட்சி நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் அல்லது மாவட்ட வருவாய் அலுவலர் போன்ற மாவட்ட அளவிலான அலுவலர்கள் அரசு மரியாதை செலுத்தி வருகிறார்கள்.

இந்தத் திட்டத்தை முதல்வர் அறிவித்தபிறகு இதுவரை 253 பேர் உடலுறுப்பு தானம் செய்து, அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டிருக்கிறது. இப்படி இரண்டு ஆண்டுகளில் மட்டும் இவ்வளவு பேர் உடலுறுப்பு தானம் செய்திருப்பது என்பது இந்திய அளவில் தமிழ்நாடு இன்றைக்கு முதலிடம் வகிக்கிறது.

முத்தமிழறிஞர் கலைஞர் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்ததற்குப் பிறகு இந்திய அளவில் தமிழ்நாடு இத்திட்டத்திற்காக மத்திய அரசின் பல விருதுகளை ஆண்டு தோறும் பெற்று வருகிறது. அந்தவகையில் கடந்த ஆண்டும் கூட அதிக அளவில் உடலுறுப்பு தானம் செய்தவர்கள் என்கின்ற வகையில் தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்தது. இந்த திட்டம் அறிவித்தபிறகு இதுவரை உடலுறுப்பு தானம் பதிவு செய்திருப்பவர்கள் 23,189 பேர். இப்படி இந்திய அளவில் மட்டுமல்ல உலகளவில் இந்த சிறப்புக்குரிய திட்டத்திற்கு மேலும் நிறைவேற்றுகின்ற வகையில் தியாகச் சுவர் நிறுவப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதிலும் இதுபோல் நிறுவப்படவிருக்கிறது என மா.சுப்பிரமணியம் கூறினார் .

A wall of Honour will be built across Tamil Nadu says Minister M. Subramaniam

வாக்குரிமையை இழக்கும் நிலை ஏற்படலாம்; வாக்குத் திருட்டைத் தடுக்க வேண்டும்! - முதல்வர் பேச்சு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்
வீடியோக்கள்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

தினமணி வீடியோ செய்தி...

21 டிச., 2025
லவ் அட்வைஸ் பாடல்!
வீடியோக்கள்

லவ் அட்வைஸ் பாடல்!

தினமணி வீடியோ செய்தி...

20 டிச., 2025
ஹாப்பி ராஜ் - ப்ரோமோ!
வீடியோக்கள்

ஹாப்பி ராஜ் - ப்ரோமோ!

தினமணி வீடியோ செய்தி...

20 டிச., 2025
தரையிறங்க முடியாமல் திரும்பிய மோடியின் ஹெலிகாப்டர்! | செய்திகள்: சில வரிகளில் | 20.12.25
வீடியோக்கள்

தரையிறங்க முடியாமல் திரும்பிய மோடியின் ஹெலிகாப்டர்! | செய்திகள்: சில வரிகளில் | 20.12.25

தினமணி வீடியோ செய்தி...

20 டிச., 2025
மூன்வாக் - மினி கேசட் விடியோ!
வீடியோக்கள்

மூன்வாக் - மினி கேசட் விடியோ!

தினமணி வீடியோ செய்தி...

19 டிச., 2025
97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!
வீடியோக்கள்

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!

தினமணி வீடியோ செய்தி...

19 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023