மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வியாழக்கிழமை காலை(ஜூன் 26) வினாடிக்கு 13,332 கன அடியாக அதிகரித்துள்ளது.
தென்மேற்கு பருவ மழையானது கர்நாடக மாநிலத்தில் காவிரியில் நீர் பிடிப்புப் பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் தொடர்ந்து பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அணைகள் நிரம்பும் தருவாயில் உள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி அவ்விரு அணைகளிலிருந்து வியாழக்கிழமை காவிரியில் வினாடிக்கு 63,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.
ஒகேனக்கல்லுக்கு வியாழக்கிழமை காலை 32,000 கனஅடியாக அதிகரித்து தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.
இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போது, வியாழக்கிழமை (ஜூன் 26) நீர்வரத்து வினாடிக்கு 13,332 கன அடியிலிருந்து 18,920 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 112.73 அடியாக உயர்ந்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 20,000 கன அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 82.348 டிஎம்சியாக உள்ளது.
இதனால் காவிரி டெல்டா பாசனத்திற்து தடையின்றி தண்ணீர் கிடைக்கும் என்று காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணை நிலவரம்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


