எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

இந்த வாரம் ஓடிடி வெளியீடு தொடர்பாக...

News image
கோப்புப்படம்
Updated On :30 ஜனவரி 2025, 10:57 am

DIN

இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்பதைப் பார்க்கலாம்.

டோவினோ தாமஸ், திரிஷா நடிப்பில் வெளியான மலையாள மொழிப்படமான ஐடென்டிட்டி திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

சங்ககிரி ராச்குமார் இயக்கத்தில் சேரன், சத்யராஜ் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள பயாஸ்கோப் திரைப்படம் நாளை ஜன. 31) ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

நடிகர் அல்லு அர்ஜுனின் புஷ்பா - 2 திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

அசோக் செல்வன் நடிப்பில் வெளியான எமக்குத் தொழில் ரொமான்ஸ் படம் டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் நாளை(ஜன. 31) வெளியாகிறது.

மலையாள மொழி திரில்லர் திரைப்படமான 90: MINUTES திரைப்படத்தை சிம்பிளி செளத் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

இதைத் தவிர்த்து, கடந்த வாரம் வெளியான தி ஸ்மைல் மேன் திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடியிலும் திரு.மாணிக்கம் படம் ஜீ5 ஓடிடி தளத்திலும் அலங்கு படத்தை டெண்ட்கொட்டா ஓடிடியிலும் பார்க்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.