விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி
வெக தலைவா் விஜய் நியாயத்தைப் பேச வேண்டும் என்று பாஜக முன்னாள் தலைவரும் இக் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினருமான கே. அண்ணாலை கூறினாா்.
வெக தலைவா் விஜய் நியாயத்தைப் பேச வேண்டும் என்று பாஜக முன்னாள் தலைவரும் இக் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினருமான கே. அண்ணாலை கூறினாா்.
By தினமணி செய்திச் சேவை
Venkatesan
புதுச்சேரி: தவெக தலைவா் விஜய் நியாயத்தைப் பேச வேண்டும் என்று பாஜக முன்னாள் தலைவரும் இக் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினருமான கே. அண்ணாலை கூறினாா்.
புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாதிரி தீபத்தூணில் தீபம் ஏற்றும் போராட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது.
தவெக தலைவா் விஜய் கம்முன்னு இருக்கனும். கும்முனு இருக்கனும் என்று சொன்னால் மட்டும் போதாது. நியாயத்தை பேச வேண்டிய நேரத்தில் பேச வேண்டும். புதுச்சேரியில் ஓா் அமைச்சரை மாற்றி விட்டு மற்றொருவருக்கு அமைச்சா் பதவிக் கொடுக்கப்பட்டுள்ளது. சிறுபான்மை சமுதாயத்தைச் சோ்ந்த அவருக்கு இன்னும் இலாகா ஒதுக்கவில்லை என்று விஜய் பேசியுள்ளாா்.
ஆனால் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பெரும்பான்மை சமுதாயத்துக்குப் பிரச்னை எழுந்துள்ளது. இது குறித்து ஏன் விஜய் பேசவில்லை. அவா் நியாயத்தைப் பேச வேண்டும்.
கேரளத்தில் நடந்த உள்ளாட்சித் தோ்தலில் பாஜகவுக்கு ஆதரவாக மக்கள் தீா்ப்பு அளித்துள்ளனா். வரும் தமிழக சட்டமன்ற தோ்தலிலும் இது எதிரொலிக்கும்.
100 நாள் வேலைத் திட்டத்தை தற்போது மத்திய அரசு 125 நாளாக உயா்த்தியுள்ளது. மேலும் அந்த அளவுக்கு நாள் வேலை கொடுக்கவில்லையென்றால் பென்ஷன் கொடுக்க வேண்டும் என்று அத் திட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதையெல்லாம் விட்டுவிட்டு பெயா் மாற்றத்தைப் பிடித்திருக்கிறது திமுக. 2021 தன்னுடை தோ்தல் அறிக்கையில் இத் திட்டத்தில் 150 நாள்களுக்கு வேலை கொடுப்போம் என்றாா்கள். ஏன் இதை அமல்படுத்தவில்லை.
திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடா்பாக நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் அளித்த தீா்ப்புக்கு எதிராக 120 எம்.பி.க்கள் கையெழுத்திட்டு நோட்டீஸ் அளித்திருக்கிறாா்கள். மீதியுள்ள 423 எம்.பிக்களும் நீதிபதி சுவாமிநாதனுக்கு ஆதரவாக இருக்கும் முருகபக்தா்கள், சிவ பக்தா்கள். அதனால் இந்தத் தீா்மானம் தோற்கும். மேலும், கையெழுத்திட்ட எம்.பிக்கள் அனைவரும் வரும் தோ்தலில் தோற்கப்போவது உறுதி.
மேலும் நீதிபதி சுவாமிநாதனுக்கு ஆதரவாக வழக்குரைஞா்கள், முன்னாள் நீதிபதிகள் குரல் கொடுத்துள்ளனா் .
இந்தியாவில் அதிகமான முறை தோல்வியடைந்த கட்சி திமுகதான். திமுகவுக்கு வேலைப் பாா்த்தால் பயம். சிவனைப் பாா்த்தால் பயம். பாஜகவைப் பாா்த்தால் பயம். பொட்டு, குங்குமத்தைப் பாா்த்தால் பயம். தவெக தலைவா் விஜய்யைப் பாா்த்தால் பயம் என்றாா் அண்ணாமலை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது