நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

நந்தன் முதல் லப்பர் பந்து வரை... இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

இந்த வாரம் திரையரங்குகளில் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காண்போம்.

News image
திரையரங்கு- படம்: Din
Updated On :19 செப்டம்பர் 2024, 8:47 am

DIN

வாரந்தோறும் திரையரங்குகளில் புதுப்புது திரைப்படங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. ரசிகர்கள் தங்களது விருப்ப நடிகரின் திரைப்படத்தைப் பார்க்க ஆவலோடு செல்கிறார்கள்.

கடந்த இரு வாரங்களுக்கு முன்பு விஜய்யின் கோட் படம் வெளியான பிறகு, பெரிதாக எந்த தமிழ் படமும் வெளியாகாத நிலையில், இந்த வாரம் 7 தமிழ் படங்கள் வெளியாகிறது.

அந்தவகையில், இந்த வாரம் திரையரங்குகளில் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காண்போம்.

லப்பர் பந்து

தமிழரசன் பச்சமுத்து இயக்கியுள்ள 'லப்பர் பந்து' படத்தில் அட்டக்கத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர். மேலும், ஸ்வாஸ்திகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, காளி வெங்கட், பால சரவணனன், தேவ தர்ஷிணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படம் நாளை(செப். 20) வெளியாகிறது.

கடைசி உலகப் போர்

ஹிப்ஹாப் ஆதியின் 8-வது படத்திற்கு 'கடைசி உலகப் போர்' எனப் பெயரிட்டுள்ளது. அவரே தயாரித்து இயக்கி நடிக்கும் இந்தப் படம் நாளை (செப். 20) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

நந்தன்

நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நந்தன்'. இப்படத்தில் நாயகியாக ஸ்ருதி பெரியசாமி நடித்திருக்கிறார். பிரதான கதாபாத்திரத்தை சமுத்திரக்கனி ஏற்றுள்ளார். இரா. சரவணன் இயக்கியுள்ள நந்தன் படம் நாளை(செப். 20) திரைக்கு வருகிறது.

தோழர் சேகுவேரா

அலெக்ஸ் இயக்கத்தில் சத்யராஜ் நடித்துள்ள திரைப்படம் தோழர் சேகுவேரா. மேலும் இப்படத்தில் மொட்டை ராஜேந்திரன், நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் நாளை(செப். 20) வெளியாகிறது.

கோழிப்பண்ணை செல்லதுரை

சீனு ராமசாமி இயக்கத்தில் யோகி பாபு மற்றும் புதுமுகங்கள் நடித்துள்ள படம் கோழிப்பண்ணை செல்லதுரை. ஆக்லாந்து சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான முதல் தமிழ்ப்படம் என்கிற பெயரை இப்படம் பெற்றுள்ளது. கோழிப்பண்ணை செல்லதுரை திரைப்படம் நாளை(செப். 20) திரைக்கு வருகிறது.

தோனிமா

ஜெகதீசன் சுப்பு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தோனிமா. இப்படத்தில் காளி வெங்கட், ரோஷினி பிரகாஷ், வைசவ் ராஜ், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் நாளை(செப். 20) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

நடிகர் சதீஷின் சட்டம் என் கையில், தி கன்ஃபெஷன் ஆகிய படங்களும் நாளை(செப். 20) வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.