தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

நீட்டைப் பேச மாட்டோம் என்றால் அதன்பின் உள்ள அதிகாரம் யாருடையது ? - சு. வெங்கடேசன் எம்.பி

அவையைக் கூட ஒத்திப் போடுவோம் ஆனால் நீட்டைப் பேச மாட்டோம் என்றால் அதன்பின் உள்ள அதிகாரம் யாருடையது ? என்று வெங்கடேசன் எம்.பி கேள்வி

News image

"நீட் முறைகேடு" இதனை அவசர பிரச்னையாக அவையில் விவாதிக்க வேண்டுமென வெள்ளிக்கிழமை ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு கைகளில் எழுதி கொடுத்துள்ள நோட்டீஸ்

Updated On :28 ஜூன் 2024, 9:45 am

புதுதில்லி: அவையைக் கூட ஒத்திப் போடுவோம் ஆனால் நீட்டைப் பேச மாட்டோம் என்றால் அதன்பின் உள்ள அதிகாரம் யாருடையது ? என்று வெங்கடேசன் எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:

நீட் தேர்வு குறித்து எதிர்கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மானம் கொடுக்க முடிவுவெடுத்த பின் வியாழன் இரவு முதல் எங்களின் மின்னஞ்சல் வசதிகள் காலாவதியாகிவிட்டதாகச் சொல்லி முடக்குவது தான் பாஜகவின் ஜனநாயக மரபு.

இந்தச் செயலுக்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பொறுப்பேற்று விளக்கம் அளிக்க வேண்டும்.

"நீட் முறைகேடு" "நீட்டே ஒரு முறைகேடு தான்" இதனை அவசர பிரச்னையாக அவையில் விவாதிக்க வேண்டுமென வெள்ளிக்கிழமை ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு கைகளில் எழுதி நோட்டீஸ் கொடுத்துள்ளோம்.

நீட் தேர்வு மோசடிகள் குறித்து விவாதிக்க நாங்கள் கொடுத்த ஒத்திவைப்பு தீர்மானத்தை ஏற்க மறுத்து அவையை நாள் முழுவதும் ஒத்தி வைத்தார் சபாநாயகர் .

அவையைக் கூட ஒத்திப் போடுவோம் ஆனால் நீட்டைப் பேச மாட்டோம் என்றால் அதன்பின் உள்ள அதிகாரம் யாருடையது ? என்று வெங்கடேசன் எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.