மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 93,828 கன அடியாக அதிகரித்ததன் காரணமாக அணையின் நீர்மட்டம் 405 நாள்களுக்குப் பிறகு 71-ஆவது முறையாக 100 அடியாக உயர்ந்தது.
கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்பிடிப்புப் பகுதிகளிலும் கேரள மாநிலம் வயநாட்டிலும் கனமழை பெய்து வருகிறது. கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பியதால் அணைகளுக்கு வரும் நீர் முழுமையாக காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சனிக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 93,828 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து சனிக்கிழமை காலை அணையின் நீர்மட்டம் 71-ஆவது முறையாக 100 அடியாக உயர்ந்துள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைகளுக்காக வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 64.5 டிஎம்சியாக உள்ளது.
நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் வெள்ள்கிழமை காலை 92.62 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை காலை 100 அடியாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 7 அடி உயர்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை



