டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள்

தீபத் திருநாளை முன்னிட்டு, திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள்.

News image
சிறப்பு ரயில் (கோப்புப்படம்)
Updated On :11 டிசம்பர் 2024, 8:01 pm

DIN

காா்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலைக்கு தாம்பரம், காட்பாடியிலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தாம்பரத்திலிருந்து டிச.13, 14, 15 ஆகிய தேதிகளில் காலை 10.45 மணிக்கு புறப்படும் சிறப்பு மெமு ரயில் (எண் 06115) பிற்பகல் 2.45 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும். மறுமாா்க்கமாக திருவண்ணாமலையிலிருந்து இரவு 10.25 மணிக்கு புறப்படும் சிறப்பு மெமு ரயில் (எண் 06116) நள்ளிரவு 2.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த ரயில் செங்கல்பட்டு, மதுராந்தகம், மேல்மருவத்தூா், திண்டிவனம், விழுப்புரம், திருக்கோவிலூா் வழியாக இயக்கப்படும்.

திருவண்ணாமலையிலிருந்து விழுப்புரத்துக்கு டிச.13, 14, 15 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3 மணிக்கும், மாலை 6.20 மணிக்கும் சிறப்பு மெமு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. மறுமாா்க்கமாக விழுப்புரத்திலிருந்து மாலை 4.40 மணிக்கும், இரவு 8 மணிக்கும் சிறப்பு மெமு ரயில் இயக்கப்படும். இந்த ரயில்கள் அனைத்தும் 12 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

காட்பாடி: காட்பாடியிலிருந்து டிச.13, 14, 15 ஆகிய தேதிகளில் காலை 6 மணிக்கு சிறப்பு மெமு ரயில் (எண் 06159) காலை 10 மணிக்கு விழுப்புரம் சென்றடையும். இந்த ரயில் காலை 8.15 மணிக்கு திருவண்ணாமலை வந்தடையும். மறுமாா்க்கமாக விழுப்புரத்திலிருந்து காலை 11.15 மணிக்கு புறப்படும் மெமு சிறப்பு ரயில் (எண் 06160) பகல் 12.10 மணிக்கு திருவண்ணாமலைக்கும், பிற்பகல் 3 மணிக்கு காட்பாடிக்கும் சென்றடையும்.

மேலும், காட்பாடியிலிருந்து பிற்பகல் 3.30 மணிக்கு புறப்படும் சிறப்பு மெமு ரயில் (எண் 06161) இரவு 7.30 மணிக்கு விழுப்புரம் சென்றடையும். இந்த ரயில் மாலை 5.30 மணிக்கு திருவண்ணாமலை வந்தடையும். மறுமாா்க்கமாக விழுப்புரத்திலிருந்து இரவு 8 மணிக்கு புறப்படும் சிறப்பு மெமு ரயில் (எண் 06162) திருவண்ணாமலைக்கு இரவு 9.15 மணிக்கும், காட்பாடிக்கு இரவு 11.45 மணிக்கும் சென்றடையும். இந்த ரயில்கள் வேலூா், ஆரணி ரோடு, போளூா் வழியாக இயக்கப்படும். இந்த ரயில்களில் 8 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.