வயநாட்டில் நிலச்சரிவுகளால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் பாா்வையிடுவதற்காக சனிக்கிழமை அங்கு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, பேரழிவின் தீவிரத்தை நேரில் பார்வையிட்ட பின்னர், அதை தேசிய பேரிடராக அறிவிப்பார் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வயநாட்டில் கடந்த ஜூலை 30-ஆம் தேதி ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் பல்வேறு மலைக்கிராமங்களைச் சோ்ந்த 400-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். நிலச்சரிவில் சிக்கிய 226-க்கும் மேற்பட்டோரின் உடல்கள் மற்றும் 192 உடல் உறுப்புகள் மீட்கப்பட்டுள்ளன. நிலச்சரிவைத் தொடா்ந்து மாயமானவா்களின் எண்ணிக்கை சுமாா் 138-ஆக உள்ளது.
மீட்பு-தேடுதல் பணிகள் தொடா்ந்து வரும் நிலையில், நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவா்களுக்கு தற்காலிக மறுவாழ்வு அளிக்கும் நடவடிக்கைகளில் மாநில அரசு ஈடுபட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை நான் நேரில் பாா்த்தேன். சில இடங்களில் ஒட்டுமொத்த குடும்பத்தினரும் உயிரிழந்துவிட்டனா். வேறு சில பகுதிகளில் குடும்பத்தில் ஓரிருவா் மட்டுமே எஞ்சியுள்ளனா். குழந்தைகள் நிா்கதியான சோகமும் நிகழ்ந்துள்ளது.முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. உள்கட்டமைப்புகள் பெருமளவில் சேதமடைந்துள்ளன.
வயநாடு நிலச்சரிவை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரிவான மறுவாழ்வு தொகுப்பை அறிவிப்பதோடு, இயற்கை பேரிடரைத் தாங்கும் வகையிலான உள்கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். உயிரிழந்தோா் குடும்பங்களுக்கான நிவாரணத் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி நேரில் பார்வையிட்டு நிலமையை ஆய்வு செய்ய வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தினாா்.
இதேபோன்று வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பாா்வையிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர்.
இந்த நிலையில், கேரள மாநிலம், வயநாட்டில் நிலச்சரிவுகளால் ஏற்பட்ட பாதிப்பை நேரில் பாா்வையிட பிரதமா் நரேந்திர மோடி ,‘கேரள மாநிலம், கண்ணூருக்கு சனிக்கிழமை காலை 11 மணியளவில் வந்தடைகிறார். பின்னா் அங்கிருந்து வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளை வான்வழியாகப் பாா்வையிடுகிறாா். நிவாரண முகாம் மற்றும் மருத்துவமனைக்கு சென்று, பாதிக்கப்பட்டோரை நேரில் சந்தித்துப் பேசவுள்ளாா்.
வயநாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண நடவடிக்கைகள், மறுவாழ்வுப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டத்திலும் அவா் பங்கேற்கவுள்ளாா்.
இந்த நிலையில், வயநாடு செல்லும் பிரதமர் மோடி வயநாட்டில் நிலச்சரிவுகளால் ஏற்பட்ட கடுமையான இயற்கை பேரழிவுகளை நேரில் பாா்வையிட்ட பின்னர், அதை தேசிய பேரிடராக அறிவிப்பார் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், வயநாட்டில் நிலச்சரிவுகளால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் பாா்வையிடுவதற்காக சனிக்கிழமை அங்கு செல்லும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. இதுவொரு நல்ல முடிவு.
பேரழிவின் தீவிரத்தை நேரில் பார்வையிட்ட பின்னர், அதை தேசிய பேரிடராக அறிவிப்பார் என்று நம்புவதாக ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வயநாடு நிலச்சரிவை தேசியப் பேரிடராக அறிவிப்பதிலும், இடம்பெயர்ந்த மக்களுக்கான விரிவான தொகுப்புக்கு ஒப்புதல் அளிப்பதிலும் பிரதமரின் வருகை முக்கியமானதாக இருக்கும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!

எவ்வளவு கண்டித்தாலும் போதாது! ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்! ராஜ்நாத் சிங்

ஒவ்வொரு நெருக்கடியிலும் ஏழைகள் முதலில் பலியாவது ஏன்? பிரதமருக்கு ராகுல் கேள்வி!
பினராயி விஜயனை கட்டுப்படுத்தும் பிரதமர் மோடி: ராகுல்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


