2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

சென்னையில் 3 நாள்கள் ’ஓவியச் சந்தை’: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்

சென்னையில் மூன்று நாள்கள் நடைபெறும் ஓவிய கண்காட்சி மற்றும் விற்பனை சந்தையை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.

News image
சென்னை, அரசு அருங்காட்சியகத்தின் திறந்த வெளியில் அமைக்கப்பட்ட அரங்கில் ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் அடங்கிய ஓவியச் சந்தையை சனிக்கிழமை தொடங்கி வைத்து பார்வையிடும் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்.
Updated On :3 ஆகஸ்ட் 2024, 9:01 am

DIN

சென்னையில் அரசு கலைத்துறை சார்பில் சனிக்கிழமை முதல் மூன்று நாள்களுக்கு நடைபெறும் ஓவிய கண்காட்சி மற்றும் விற்பனை சந்தையை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். இதில் தமிழத்தை சேர்ந்த ஓவியம் மற்றும் கலை வல்லுநர்களின் படைப்புகள் விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

கலை பண்பாட்டுத்துறையின் வாயிலாக ஓவிய மற்றும் சிற்பக் கலைகளில் ஈடுபட்டுள்ள கலைஞர்களை ஊக்கப்படுத்தவும், அவர்களின் வாழ்வாதாரத்தினை

உயர்த்திடும் வகையில், சென்னை மற்றும் கோயம்புத்தூரில் கலைஞர்களின் ஓவியம் மற்றும் சிற்பக் கலைப்படைப்புகளைக் காட்சிப்படுத்தி, விற்பனை செய்யும் ‘ஓவியச் சந்தை’ திட்டத்தினை செயல்படுத்திட ரூ.10 லட்சம் நிதி ஒப்பளிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Story image

இதுகுறித்து அரசின் அரசாணையின் அடிப்படையில் சென்னையில், 3.8.2024, 4.8.2024 மற்றும் 5.8.2024 ஆகிய மூன்று நாள்கள் சென்னை அரசு அருங்காட்சியக வளாகத்தில் ஓவியம் மற்றும் சிற்பக் கலைப்படைப்புகளைக் காட்சிப்படுத்தி, விற்பனை செய்யும் ஓவியச்சந்தை திட்டத்தினை செயல்படுத்தி அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டு, விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து ஓவியம் மற்றும் சிற்பக் கலைஞர்களிடமிருந்து 100 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

100 ஓவிய, சிற்பக் கலைஞர்களின் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வாட்டர் கலர், கேன்வாஸ், ஆயில் கலர், அக்ரலிக், மிக்‌ஷர் மீடியா, பென்சில், பிரிண்ட் மேக்கிங் ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் அடங்கிய ஓவியச் சந்தை சனிக்கிழமை(ஆகஸ்ட் 3), சென்னை, அரசு அருங்காட்சியகத்தின் திறந்த வெளியில் அமைக்கப்பட்ட அரங்கில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த விழாவில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின் அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் பி. சந்தரமோகன், கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் சே.ரா.காந்தி, அரசு அருங்காட்சியகங்களின் இயக்குநர் கவிதா ராமு,சென்னை அரசு கவின் கலைக் கல்லூரியின் முதல்வர்(பொ) மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

சென்னை, அரசு அருங்காட்சியகத்தின் திறந்து வைத்த அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அரங்கில் வைக்கப்பட்ட பிரிண்ட் மேக்கிங் ஓவியங்கள் குறித்து விளக்கம் அளிக்கும் அரசு கவின் கலைக் கல்லூரி மாணவி.

சென்னை, அரசு அருங்காட்சியகத்தின் திறந்து வைத்த அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அரங்கில் வைக்கப்பட்ட பிரிண்ட் மேக்கிங் ஓவியங்கள் குறித்து விளக்கம் அளிக்கும் அரசு கவின் கலைக் கல்லூரி மாணவி.

தமிழ்நாட்டில் ஓவியச் சந்தை திட்டமானது தமிழ்நாட்டினை சார்ந்த ஓவிய, சிற்பக் கலைஞர்கள் பயன்பெறும் பொருட்டு, புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஒரு திட்டம். ஓவிய,

சிற்பக் கலைஞர்களுக்காக மாநில அளவிலான ஓவிய கண்காட்சி நடத்துதல், சிறந்த கலைப்படைப்புகளுக்கு பரிசுகள் வழங்குதல், சிறந்த கலை ஆசிரியர்களுக்கும், கலை நூல் ஆசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்குதல் மற்றும் ஓவிய, சிற்பக் கலைஞர்களை பெருமைப்படுத்தும் வகையில் மாநில அளவில் கலைச்செம்மல் என்ற விருதுகள் வழங்குதல், மண்டல கலை கலைக்காட்சிகள் நடத்தி சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்குதல், தனி நபர், குழுவாக ஓவிய கண்காட்சி நடத்த நிதியுதவி வழங்குதல், அரசு கவின் கலைக் கல்லூரியில் பயிலும் சிறந்த மாணவர்களுக்கு சிறப்பு படிப்பு உதவித் தொகை வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை ஓவிய, சிற்பக் கலைஞர்களுக்காக அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

கலையினை வாழவைப்பதோடு, கலைஞர்களையும் வாழ வைத்திட ஏதுவாக, ஓவிய சந்தை கண்காட்சியினை திரளான பொதுமக்கள், கலை ஆர்வலர்கள், ஓவியர்கள், சிற்பிகள் வருகை தந்து கண்டுகளிப்பதோடு, கலைஞர்களை ஊக்கவிக்கும் வகையிலும், அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலும், கலைஞர்களின் கலைப்படைப்புகளை வாங்கிடவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.