விஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

எடப்பாடி, கொங்கணாபுரம் பகுதிகளில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு

எடப்பாடி நகர பகுதியில் நடைபெற்ற ஜெயலலிதா நினைவு நாள் நிகழ்ச்சியில் அலங்கரிக்கப்பட்ட  முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு,  அதிமுக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செய்தனர். 

News image
எடப்பாடி நகர பகுதியில் நடைபெற்ற ஜெயலலிதா நினைவு நாள் நிகழ்ச்சியில் அலங்கரிக்கப்பட்ட  ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு,  அதிமுக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செய்தனர். 
Updated On :28 ஜனவரி 2024, 5:37 am

DIN


எடப்பாடி: எடப்பாடி நகர பகுதியில் நடைபெற்ற ஜெயலலிதா நினைவு நாள் நிகழ்ச்சியில் அலங்கரிக்கப்பட்ட  முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு,  அதிமுக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செய்தனர். 

நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் ஏ.எம்.முருகன், நகர மன்ற முன்னாள் தலைவர் டி. கதிரேசன், கூட்டுறவு சங்கத் தலைவர் கந்தசாமி உள்ளிட்ட திரளான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

இதேபோல்  கொங்கணாபுரம் ஒன்றியத்திற்கு உள்பட்ட மூல பாதை சந்திப்பில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற ஜெயலலிதா நினைவு நாள் நிகழ்வில்,  ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.ஏ. ராஜ்குமார், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். 

மேலும் எடப்பாடி நகரத்திற்கு உள்பட்ட பல்வேறு இடங்களில் ஜெயலலிதாவின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.