அப்படி இருக்கும் போது எந்தக் கோயிலையும் இடிக்காமல் உருவாக்கப்பட்ட ஒரு மசூதியை, அங்கு ராமர் பிறந்தார் என்ற ஒரு கோரிக்கையை முன் வைத்து இடிப்பதற்கு வரலாற்று ஆதாரங்கள் இல்லை. புராண ஆதாரங்களாவது இருக்க வேண்டுமில்லையா? இந்தப் புள்ளியில் தான், இந்த இடத்தில் தான், இந்த 2.77 ஏக்கரில் தான் ராமர் பிறந்தார் என்பதற்கு அங்கே புராண அடையாளமாவது இருக்க வேண்டுமில்லையா? அப்படி எதுவும் இல்லை. அயோத்தி என்பது பெரிய ஊர், அங்கே எங்கே வேண்டுமானாலும் ராமர் பிறந்த இடம் இருக்கலாம். அந்த இடத்தில் ஒரு காலத்தில் கங்கையே கூட ஓடியிருக்கலாம். ஆற்றின் போக்கு மாறி மாறி வரக்கூடிய இடம் தானே அது!