‘மே 31 ஆம் தேதி தனது அறைக்கு என்னை அழைத்த அந்த உயர் அதிகாரி, அறைக்குள் தான் அழைக்கும் வரை எவரும் வரக்கூடாது என பிற அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பின்னர் என்னிடம், நீ இங்கே எப்படி வேலை செய்ய விரும்புகிறாய்? துறை சார்ந்த அலுவலக வேலையைச் செய்ய விரும்புகிறாயா? அல்லது பொழுது போக்காக வேலை செய்ய விரும்புகிறாயா? என்றும் கேட்டார். அதோடு அதிகாரப் பூர்வ அலுவலக கோப்புகளில் கையெழுத்திடும் போதும், குறிப்புகள் எழுதும் போதும் எதிர்ப்புக் கருத்துகளை அதில் பதிவு செய்யக் கூடாது எனக் கூறினார். அவர் எனக்கு வேலை செய்யக் கற்றுத்தரும் விதத்தைப் பார்த்தால் புதுமணமகளுக்கு புகுந்த வீட்டில் வேலை கற்றுத்தருவது போல இருந்தது. அதனால் தான் அவரது நடத்தை எனக்கு ஒழுக்கக் கேடானது போலத் தோன்றியது.’ - என விவரித்திருந்தார்.