‘தமிழகத்தில் பாஜக இருக்கிறதா? இங்கே அது வெறும் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனம் போலத்தானே செயல்பட்டு வருகிறது. யாரையாவது போய் சந்திப்பது, மாலை போடுவது, புகைப்படம் எடுத்துக் கொள்வது... இப்படித்தானே அவர்கள் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள், அதனால் பாஜக குறித்து பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தமிழக பாஜக வின் தலைமையில் மாற்றமில்லை என்றால் தமிழக பாஜகவில் மீண்டும் அதே மாதிரியான நிலமை தான் நீடிக்கப் போகிறது. மாற்றமில்லை என்றால் தேர்தல் வெற்றிக்கான மாற்றங்களை யார் கொண்டு வரப்போகிறார்கள். கட்சிக்கான பலன்களை கொண்டு வராதவர்கள் யாரோ, அவர்களை எல்லாம் வெளியேற்ற வேண்டும். அப்படிப் புதிதாக யாரையாவது கொண்டு வந்தால் தான் பாஜகவுக்கு தமிழகத்தில் எதிர்காலம் இருக்கும். இந்துத்வாவுக்கு தமிழகத்தில் எதிர்காலம் இருக்கிறது. இந்து ஒற்றுமையை நிலைநாட்டக்கூடிய கட்சிக்கு தமிழ்நாட்டில் எதிர்காலம் இருக்கிறது. ஆனால், இப்போதுள்ளவர்கள் இந்துத்வாவுக்கு சாதகமற்ற கருத்துக்களையெல்லாம் கூட அறிக்கையாக சமர்பித்து விடுகிறார்கள். அதனால் தமிழக பாஜகவால் தனது இந்துத்வா துறுப்புச் சீட்டை வைத்துக் கொண்டு இங்கே வெற்றி பெற முடியாது.