‘ஃபேட் பாய்’ என்று செல்லமாக அழைக்கப்படும் GSLV MARK 3, இந்தியா இதுவரை தயாரித்த ராக்கெட்டுகளிலேயே மிக அதிக சக்தி வாய்ந்த, மிக மிக அதிக எடை கொண்ட ராக்கெட்டுகளில் முதன்மையானது. அதன் எடையைக் கணிக்க வேண்டுமானால் 200 யானைகளின் பலம் கொண்டது என்று சொல்லலாம் அல்லது 5 ஜம்போ ஜெட்டுகளுக்கு இணையான எடை கொண்டது என்று கூறலாம். இந்த மீத்திறன் வாய்ந்த GSLV Mark 3 ராக்கெட்டை ISRO கடந்த திங்களன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. ஏவிய மாத்திரத்தில் ராக்கெட் தன்னைத்தானே செல்ஃபி எடுத்து அனுப்பியது. அந்த செல்ஃபி தான் தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.