‘ மோடி நீ இப்ப வந்தா டெட்பாடி’
‘என் மாடு, என் நாடு, நீ மூடு’
‘காணவில்லை ஓ.பன்னீர்செல்வம், குறிப்பு: மிக்ஸர் போதாது என்று சின்னம்மா அழுகிறார்’
‘பீட்டா, பீட்டா பிஞ்சு போகும் பேட்டா”
- இதை விட மோசமாகவும் அங்கு கோஷமிட்டுக் கொண்டிருந்தனர். பெரும்பாலானவை நினைவில் நிற்காததால் இங்கு பதிவு செய்ய முடியவில்லை. ஆனால் ஒரு விசயம் அப்பட்டமாகத் தெரிந்தது. இப்படி கோஷமிட்டவர்கள் நிச்சயமாக உண்மையான மாணவப் போராட்டக்காரர்களாக இருக்க வாய்ப்பில்லை. மாணவர்கள் செய்யக்கூடிய வேலை அல்ல அது. ஒரு வேளை அவர்களும் மாணவர்கள் தான் எனில் அவர்களது போராட்ட முறை தவறு. அந்தத் தவறுகள் தான் இன்றைய அவமதிப்புக்கு தனிப் பெரும் காரணம். மற்றபடி அந்நிய நாட்டு குளிர்பானங்களைத் தடை செய்ய வேண்டும் எனவும், பீட்டாவைத் தடை செய்ய வேண்டும் எனவும் அவர்களது கோரிக்கைகள் நீண்டு கொண்டு போனது ஒரு பிரதான காரணமே இல்லை. மிகக் கண்ணியமான முறையில் போராடிக் கொண்டிருந்த மாணவர்களின் சக்தியைக் கண்டு அரசியல் கட்சிகள் ஒரு புறம் பாராட்டினாலும் மறுபுறம் மிரண்டு போனதும் உண்மையே! அதிலும் நேற்று முன் தினம் ஆர்.ஜே பாலாஜியின் மெரினா உரை ஊடகங்களில் பலமுறை பகிரப்பட்டு பலரிடம் தன்னம்பிக்கை வித்தை விதைத்துச் சென்றது. அவரது உரையிலிருந்து கொஞ்சம் இங்கே;