நியூயார்க் டைம்ஸ், நியூயார்க் காவல்துறையுடன் இணைந்து செயலாற்றிக் கண்டறிந்த விசயங்களில் கடந்த பத்தாண்டுகளாகத் தொடர்ந்து அண்டை நாட்டிலிருந்து அமெரிக்காவில் தஞ்சமடைந்த சிறுபான்மையினர் கூட்டாகவோ அன்றி தனியாகவோ வன்முறைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்பது தெரிய வந்தது. அவர்களது வீடுகள் மற்றும் நிறுவனங்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாவது ஆதார பூர்வமாக கண்டறியப்பட்டுள்ளது. நியூயார்க்கில் இதுவரை பதிவான 1100 நியூஸன்ஸ் வழக்குகளில் பெரும்பான்மையானவை சிறுபான்மையினரை தாக்கும் மனப்பான்மையில் வலிந்து உருவாக்கப் பட்டு பதிவானவை என்பது புலனாய்வில் தெரிய வந்தது.