ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

விரைவில் பிளாஸ்டிக் ரூ.10, ரூ.20 தாள்கள்! புழக்கத்தில் இருக்கும் பணம் என்னவாகும்?

விரைவில் பிளாஸ்டிக் ரூ.10, ரூ.20 தாள்கள் வெளியாகும் என்பதால் புழக்கத்தில் இருக்கும் பணத்தாள்கள் என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Indian rupee depreciated marginally last quarter, long term outlook positive: Experts

இந்திய ரூபாய் தாள்கள் - கோப்பிலிருந்து

Published On :6 ஆகஸ்ட் 2026, 12:48 pm IST

ரூபாய் தாள்களை காகிதத்தில் அச்சிடுவதற்கு மாறாக பிளாஸ்டிக் அல்லது பாலிமரில் அச்சிடும் நடைமுறை ஆர்பிஐ கொண்டுவரவிருக்கிறது. இதனால், ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் பணம் என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

முதற்கட்டமாக ரூ.10 மற்றும் ரூ.20 தாள்களை பிளாஸ்டிக்கில் அச்சடித்து அடுத்த ஆண்டில் புழக்கத்தில் விட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக 100 கோடி ரூ.10 ரூபாய் தாள்களும், 100 கோடி எண்ணிக்கையில் ரூ.20 தாள்கள் அச்சிடப்படவிருக்கின்றன. இதன் மொத்த ரூபாய் மதிப்பு ரூ.3,000 கோடியாக இருக்கும்.

ரூ. 10 மற்றும் ரூ. 20 மதிப்பிலான பாலிமர் (பிளாஸ்டிக்) ரூபாய் தாள்களுக்கான களச் சோதனைகளைத் தொடங்க இந்திய ரிசர்வ் வங்கி (RBI) முன்வைத்த பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி, காகித ரூபாய் நோட்டுகளைப் படிப்படியாக புழக்கத்திலிருந்து அகற்றுவதற்கு இந்தியா தயாராகிவிட்டதா? என்று சந்தேகம் எழுகிறது.

இதற்கு உடனடியாக மற்றும் உறுதியான பதில் இல்லை என்பதே. காரணம், படிப்படியாக பிளாஸ்டிக் தாள்களை புழக்கத்தில் விட்டாலும், காகித ரூபாய்களும் புழக்கத்தில்தான் இருக்கும்.

தற்போது புழக்கத்தில் உள்ள காகித ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாகப் புதிய நோட்டுகளைக் கொண்டுவரும் திட்டம் ஏதுமில்லை என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியிருக்கிறது.

அதாவது, முற்றிலும் நாட்டில் காகித தாள்களை அகற்றிவிட்டு, பிளாஸ்டிக் நோட்டுகளை கொண்டு வருவது என்ற முடிவை எடுப்பதற்கு முன் ஒரு பரிசோதனை முயற்சியாக பாலிமர் ரூபாய் தாள்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை அறிய, காகித நோட்டுகளுடன் இணைத்தே இவையும் புழக்கத்தில் விடப்படும்.

இந்த சோதனை முயற்சி வெற்றிகரமாக அமைந்தால், இந்த ரூ.10 மற்றும் ரூ.20 மதிப்பிலான தாள்களைத் தொடர்ந்து வெளியிடுவது குறித்து மத்திய வங்கி பரிசீலிக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஏன் பாலிமர் தாள்கள்?

ரிசர்வ் வங்கி ஏன் பாலிமர் தாள்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது எனற்ல், மிக முக்கியக் காரணம் அவற்றின் நீடித்து உழைக்கும் தன்மை. ரூ. 10 மற்றும் ரூ. 20 போன்ற குறைந்த மதிப்புள்ள நோட்டுகள் அடிக்கடி கைமாறுகின்றன. இதனால் அவை விரைவில் அழுக்காவது, சேதமடைவது போன்றவற்றால் அடிக்கடி மாற்றப்பட வேண்டிய நிலையும் ஏற்படுகிறது.

எனவே, காகித தாள்களைவிட பாலிமர் நோட்டுகள் நீண்ட காலம் உழைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இவை நீர், அழுக்கு மற்றும் கிழிதல் ஆகியவற்றால் பாதிக்கப்படாது.

செலவு அதிகம்?

ஆனால், பாலிமர் ரூபாய் தாள்களைத் தயாரிப்பதற்கு ஆரம்பத்தில் அதிக செலவாகும். செலவிட்டுவிட்டால் அவை நீண்ட காலத்திற்குப் புழக்கத்தில் இருக்கும் என்பதால் தாள்களை அச்சிட மீண்டும் மீண்டும் செலவிடுவது தவிர்க்கப்படும்

இதனை அறிந்தே உலகின் பல நாடுகள் பாலிமர் நோட்டுகளுக்கு மாறி வருகின்றன. அது மட்டுமல்ல கள்ள நோட்டுகளுக்கும் வாய்ப்பிருக்காது. அதிக பாதுகாப்பு அம்சங்களையும் இணைக்க முடியும் என்கிறார்கள்.

Summary

Plastic Rs. 10 and Rs. 20 notes coming soon! What will happen to the money currently in circulation?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.