பிலாஸ்பூர்: மாநில அரசின் 446 மருத்துவ அதிகாரிகளை நியமித்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மேலும் மனுதாரருக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
2021-ஆம் ஆண்டில் 446 மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கு எம்பிபிஎஸ் பட்டதாரிகளை நியமனம் செய்வதற்கான விளம்பரத்தை அரசாங்கம் வெளியிட்டுள்ளதாக மாநில அட்வகேட் ஜெனரல் அலுவலக வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன.
நேர்காணல் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட வேண்டும் என்றும் எழுத்துத் தேர்வு இல்லாமல் நியமனம் செய்வது விதிகளுக்கு எதிரானது என்றும் மருத்துவப் பயிற்சியாளர் டாக்டர் கமல் சிங் ராஜ்புத் மனு தாக்கல் செய்தார்.
முதல் கட்ட விசாரணைக்குப் பிறகு, பணி நியமனத்துக்கு சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் தடை விதித்தது.
புதன்கிழமை நடைபெற்ற இறுதி விசாரணையில், மாநிலத்தில் குறிப்பாக கிராமப்புறங்களில் மருத்துவ அதிகாரிகள் தேவை என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
நேர்காணல் அடிப்படையில் பணி நியமனம் செய்ய விதிகள் அனுமதிக்கின்றன என்றும் அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து, மனுவைத் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், மனுதாரருக்கு ரூ.25,000 அபராதம் விதித்ததாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

