கவுகாத்தி: தேசிய மக்கள் கட்சி (என்பிபி) மணிப்பூர் வேட்பாளர் சஞ்சோயிக்காக வெள்ளிக்கிழமை இரவு பிரசாரம் செய்து கொண்டிருந்த அவரது தந்தை சம்ஜய் சிங் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களால் சுடப்பட்டதில் சம்ஜய் சிங் காயமடைந்தார். அவருக்கு வலது தோளில் துப்பாக்கிக் குண்டு காயம் ஏற்பட்டது. சஞ்சோய் பாஜகவில் இருந்து கடந்த மாதம் தேசிய மக்கள் கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய மக்கள் கட்சி தலைவரும், மேகாலயா முதல்வருமான கான்ராட் கே சங்மா, துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சஞ்சோயை மருத்துவமனைக்குச் சென்று பார்த்து நலம் விசாரித்தார். குற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய மாநில தலைமை தேர்தல் அதிகாரியை சந்திக்க உள்ளேன் என்றும் அவர் கூறினார்.
இது குறித்து அவர் சுட்டுரைப் பக்கத்தில், "எங்கள் வேட்பாளர் சஞ்சோய் சிங்கின் தந்தை சம்ஜய் சிங் பிரசார நிகழ்ச்சியில் துப்பாக்கியால் சுடப்பட்டது வேதனை அளிக்கிறது. இந்த சம்பவங்கள் நமது புனித சாரத்தை கெடுக்கின்றன" என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


