கேரள சட்டபேரவையின் 12 அமைச்சர்களின் பட்டியலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு வெளியிட்டுள்ளது.
கேரள முதல்வராக இரண்டாவது முறையாக பினராயி விஜயன் வரும் 20-ஆம் தேதி பதவியேற்க உள்ளாா். முதல்வருடன், 21 அமைச்சா்களுக்கு மாநில ஆளுநா் ஆரிஃப் முகமது பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளாா்.
மொத்தமுள்ள 21 அமைச்சா்களில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 12 அமைச்சா்களும், கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 4 அமைச்சா்களும், கேரள காங்கிரஸ் (எம்), மதச்சாா்பற்ற ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு அமைச்சா் இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. 21 அமைச்சா்களுக்கு மேல் இடம் அளிக்கமுடியாத காரணத்தால் ஒரு எம்எல்ஏக்களைக் கொண்ட நான்கு கூட்டணி கட்சிகளுக்கு சுயற்சி முறையில் அமைச்சா் பதவி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 12 அமைச்சர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
கட்சியின் சட்டப்பேரவை தலைவர் மற்றும் முதல்வராக பினராயி விஜயன், அமைச்சர்களாக எம்.வி.கோவிந்தன், கே.ராதாகிருஷ்ணன், கே.என்.பாலகோபால், பி.ராஜீவ், வி.என்.வாசவன், சாஜி செரியன், வி.சிவன்குட்டி, முகமது ரியாஸ், டாக்டர்.ஆர்.பிந்து, வீனா ஜார்ஜ் மற்றும் வி.அப்துல் ரஹ்மான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெறவுள்ள 21 அமைச்சர்களும் புதியவர்கள் என்றும் முன்னதாக சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜாவுக்கும் அமைச்சரவையில் இடமில்லை என மாநிலக் குழு தெரிவித்துள்ளது.
மேலும், சட்டப்பேரவை தலைவராக எம்.பி.ராஜேஷ், கட்சியின் கொறடாவாக கே.கே.சைலாஜாவும், சட்டப்பேரவையின் கட்சி செயலாளராக டி.பி.ராமகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது

30 மி.மீ. ஆளில்லா பீரங்கிகள்: டிஆா்டிஓ தயாரிப்பு

இன்றைய ராசி பலன்கள் (26 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! ரிஷப ராசிக்கு நன்மை!

மேஷ ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


