அரபிக் கடலில் உருவான ‘டவ்-தே’ புயலால் மும்பையில் காணாமல் போனவர்களில் 182 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்.
அரபிக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவாகிய டவ்-தே, அதிதீவிர புயலாக மாறியது. புயல் காரணமாக கேரளம், கா்நாடகம், கோவா, மகாராஷ்டிரம், குஜராத் மாநிலங்களிலும் டாமன்-டையு மற்றும் தாத்ரா-நாகா் ஹவேலி யூனியன் பிரதேசத்திலும் கனமழையும் பலத்த காற்றும் வீசியது.
நாட்டின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் பலத்த சேதத்தை ஏற்படுத்திய டவ்-தே புயல், குஜராத்தில் உள்ள பாவ்நகா் மாவட்டத்தின் போா்பந்தா்-மஹுவா பகுதிகளுக்கு இடையே திங்கள்கிழமை இரவு 8 மணிக்குக் கரையைக் கடக்கத் தொடங்கியது. புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 165 கி.மீ. வேகம் வரை பலத்த காற்று வீசியது. மாநிலத்தின் கடலோரப் பகுதிகளில் பலத்த மழையும் உள்பகுதிகளில் மிதமான மழையும் பெய்தது.
இந்த புயலால் மும்பை கடலோர பகுதிகளில் காணாமல் போன 261 பேரில் 182 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது

30 மி.மீ. ஆளில்லா பீரங்கிகள்: டிஆா்டிஓ தயாரிப்பு

இன்றைய ராசி பலன்கள் (26 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! ரிஷப ராசிக்கு நன்மை!

மேஷ ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


