அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

‘திரிணமூலுக்கு பிரசாரம் செய்வதை சரத் பவார், தேஜஸ்வி தவிர்க்க வேண்டும்‘: காங்கிரஸ்

மேற்குவங்க தேர்தலில் திரிணமூல் காங்கிரஸுக்கு பிரசாரம் செய்வதை சரத் பவார் மற்றும் தேஜஸ்வி யாதவ் தவிர்க்க வேண்டும் என மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் பிரதீப் பட்டாச்சார்யா கேட்டுக் கொண்டுள்ளார்.

News image

காங்கிரஸ்

Updated On :17 மார்ச் 2021, 10:10 am

மேற்குவங்க தேர்தலில் திரிணமூல் காங்கிரஸுக்கு பிரசாரம் செய்வதை சரத் பவார் மற்றும் தேஜஸ்வி யாதவ் தவிர்க்க வேண்டும் என மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் பிரதீப் பட்டாச்சார்யா கேட்டுக் கொண்டுள்ளார்.

மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 27ஆம் தேதி முதல் 8 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில், திரிணமூல், பாஜக, காங்கிரஸ் - இடதுசாரிகள் இடையே மும்முனை போட்டி நடைபெறவுள்ளது.

இந்நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மற்றும் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்டிரத்தில் தேசியவாத காங்கிரஸ், பிகாரில் ஆர்ஜேடியும் காங்கிரஸுடன் கூட்டணியில் உள்ளனர்.

இதையடுத்து, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மற்றும் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் பிரதீப் பட்டாச்சார்யா கடிதம் எழுதியுள்ளார்.

அதில், திரிணமூல் கட்சிக்காக நட்சித்திர பேச்சாளராக நீங்கள் பிரசாரம் செய்தால், அது மேற்குவங்க மக்களிடையே குழப்பத்தை உருவாக்கும் என்பதால் திரிணமூலுக்கு பிரசாரம் செய்வதை தவிர்க்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.