மேற்கு வங்க ஆளுநர் பாஜகவின் மாநில தலைவர் போல் செயல்படுவதாக திரிணமூல் காங்கிரஸின் பொதுச் செயலாளர் குணால் கோஷ் குற்றம்சாட்டியுள்ளார்.
பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. இந்நிலையில், தேர்தலுக்கு முன்பு திரிணமூலில் இருந்து பிரிந்து பாஜகவில் இணைந்த பலர் மீண்டும் திரிணமூலில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே மாநில ஆளுநராக ஜெகதீப் தன்கார் நியமிக்கப்பட்டதில் இருந்தே திரிணமூல் காங்கிரஸ் அரசுடன் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகின்றது.
இதுகுறித்த கேள்விகளுக்கு பதிலளித்த குணால் கோஷ் கூறியதாவது,
ஆளுநர் ஒரு பாஜக உறுப்பினரைப் போல செயல்பட்டு, மாநில அரசை தொந்தரவு செய்ய முயற்சிக்கிறார். பாஜக செய்யும் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டார். அவர்கள் மக்களின் முடிவை ஏற்கவில்லை. சட்டப்பிரிவு 355 அல்லது 356-ஐ பயன்படுத்தி ஊடுருவ முயற்சி செய்கிறார்கள்.
ஆளுநர், பாஜகவின் மாநில செயல் தலைவர் போலவும், ராஜ் பவன் பாஜக அலுவலகமாகவும் மாறிவிட்டது. ஆளுநரின் வேலை குறித்து மம்தா பானர்ஜி ஏற்கனவே பிரதமருக்கு இரண்டு, மூன்று கடிதங்களை எழுதியுள்ளார்.
மேலும், திரிணமூலில் இருந்து பாஜகவில் இணைந்த தலைவர்கள், பாஜகவில் தொடர்ந்து செயல்பட விரும்பவில்லை. குறைந்தது, பாஜகவின் 8 எம்.எல்.ஏ.க்கள், 3 எம்.பி.க்கள் திரிணமூலில் தொடர்பில் உள்ளார்கள். அவர்கள் குறித்த இறுதி முடிவை மம்தா எடுப்பார் எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழுவின் பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய்த டிரம்ப்

திருச்சி - தாம்பரம் இடையே நாளை (ஏப். 26) சிறப்பு ரயில்!

225 இடங்களைக் கைப்பற்றி பாஜகவை வேரறுப்போம்: திரிணமூல் காங்கிரஸ்

ஸ்ரீநகர் - லே தேசிய நெடுஞ்சாலையில் பனிச்சரிவு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


